கன்னியாகுமரியில் ஏற்பட்ட அரிய நிகழ்வு -மேகமூட்டத்தால் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மறைப்பு கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இவைகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் தெரிந்த போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை நன்கு தெரிந்த நிலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டது இதனால் இந்த இரண்டு நினைவகங்களும் மேகமூட்டத்திற்குள் மறைந்தது.இந்த அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த நிகழ்வு அதன் பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.மேகமூட்டம் மறைத்ததால் கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாத சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் மறைந்த பின் அவைகளை பார்த்து ரசித்தனர்.
கன்னியாகுமரியில் ஏற்பட்ட அரிய நிகழ்வு -மேகமூட்டத்தால் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மறைப்பு கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இவைகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் தெரிந்த போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை நன்கு தெரிந்த நிலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டது இதனால் இந்த இரண்டு நினைவகங்களும் மேகமூட்டத்திற்குள் மறைந்தது.இந்த அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த நிகழ்வு அதன் பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.மேகமூட்டம் மறைத்ததால் கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாத சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் மறைந்த பின் அவைகளை பார்த்து ரசித்தனர்.
- கன்னியாகுமரியில் ஏற்பட்ட அரிய நிகழ்வு -மேகமூட்டத்தால் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மறைப்பு கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இவைகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் தெரிந்த போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை நன்கு தெரிந்த நிலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டது இதனால் இந்த இரண்டு நினைவகங்களும் மேகமூட்டத்திற்குள் மறைந்தது.இந்த அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த நிகழ்வு அதன் பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.மேகமூட்டம் மறைத்ததால் கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாத சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் மறைந்த பின் அவைகளை பார்த்து ரசித்தனர்.1
- வேளாங்கண்ணி திருத்தலம் திருவிழா நடைபெறுகிறது மேலும் பார்க்க1
- அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.1
- தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை *தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.4
- தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது 🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்! 📍 தூத்துக்குடி | ஆக. 28 தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.1
- சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது உலக சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகிறார்கள் அவர்கள் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை போன்றவைகளை பார்வையிடுவதுடன் பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்கள்.இன்று கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர் இதனால் கன்னியாகுமரி களைக்கட்டி உள்ளது.கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் சூரிய உதயம் காட்சியை நேரில் கண்டு களித்தனர்.அங்குள்ள காந்தி மண்டபம் காமராஜர் மணிமண்டபம் போன்றவைகளுக்கும் சென்று அவர்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.1