காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

- காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பி. சி. ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ் .டி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பி. சி .ஆர் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்டங்களின் நடைமுறை தொடர்பான தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர் தமிழ் வேள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்SS. சரவணச்செல்வம்MA ஆறுநாட்டு வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேசியதாவது இது எந்த சமுதாயத்திற்கும் எதிரான கூட்டம் அல்ல என தெரிவித்தார்1
- கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.1
- சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.1
- வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரும் கடந்த 25- ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், மற்ற இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். கணேசபாண்டியின் உறவினர்கள் புதன்கிழமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் தாக்குதலில் சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.1