logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது  வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில்  மேலும் இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தில்  பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரும் கடந்த 25- ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், மற்ற இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.  கணேசபாண்டியின் உறவினர்கள் புதன்கிழமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் தாக்குதலில் சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

21 hrs ago
user_Prabakaran Praba
Prabakaran Praba
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
21 hrs ago

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது  வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில்  மேலும் இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தில்  பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரும் கடந்த 25- ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், மற்ற இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.  கணேசபாண்டியின் உறவினர்கள் புதன்கிழமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் தாக்குதலில் சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, 
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
    1
    காரியாபட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் இறக்காததால் பெண்கள் வாக்குவாதம் – ஓட்டுநரை செருப்பால் விரட்டியடிக்க முயன்றதால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, 5 பெண்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கல்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் 5 பெண்களும் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் பேருந்தை வலையங்குளம் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டி விரட்டி அடிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் நோக்கி சென்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    10 hrs ago
  • கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த -  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    3
    தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது
தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
    1
    நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள்  கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள்  அமைந்துள்ளது . 
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . 
முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா  மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர  பூஜையுடன் தொடங்கியது . 
அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று  இரண்டாவது நாளான நேற்று  இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும்  நடைபெற்றது . 
இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை  நடைபெற்றது . 
அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள்  விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள்  புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . 
அப்போது வானத்தில் கருடன்  கோவிலை  வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக  அன்னதானம் வழங்கப்பட்டது
இவ்விழாவில்  ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்  மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு   அம்மனை வழிபட்டனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் *வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது* *ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு* ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
    1
    ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்
*வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது*
*ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு*
ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் 
ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் 
இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது 
இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது 
ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    1
    சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் 
இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு  Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    23 hrs ago
  • வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது  வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில்  மேலும் இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தில்  பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரும் கடந்த 25- ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், மற்ற இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.  கணேசபாண்டியின் உறவினர்கள் புதன்கிழமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் தாக்குதலில் சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது 
வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு


வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய வழக்கில்  மேலும் இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். வீடு, வாகனங்களை சேதப்படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரத்தில்  பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரும் கடந்த 25- ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், மற்ற இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். 
கணேசபாண்டியின் உறவினர்கள் புதன்கிழமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் தாக்குதலில் சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.