Shuru
Apke Nagar Ki App…
வீட்டில் தையல் கற்க அரியவாய்ப்பு! விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.
ஆறுமுகம்
வீட்டில் தையல் கற்க அரியவாய்ப்பு! விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின. சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.1
- திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வரும் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருத்தேரோட்டம் நிறைவுற்றவுடன் மதுரை புறப்பட்டார் அழகர் கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர் நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்1
- *தேனி அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது* *ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த திருமஞ்சன அபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமாளை வழிபட்டுச் சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் வரதராஜர் பெருமாள் அவதரித்த நாளான ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் இன்று நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்தும் மூலவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர் இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மூலவருக்கு தூபம் காட்டப்பட்டு, ஷோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது தமிழகத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் தேனி வரதராஜ பெருமாள் மட்டுமே ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது1
- காதல்Vsஅக்கறை !!! தனக்கானவள் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்ற உணர்ச்சி !!! #love #vlog #duet1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. காவிரி குடிநீர் வீணாவதை பார்த்து பொங்கி எழுந்த சமூக ஆர்வலர். பிரதான சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேங்கிய சுகாதாரமற்ற நீர் குடிநீரில் குழாய்களில் கலப்பதால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக.சுகாதாரமற்ற குடிநீரை பருகம் அவல நிலைக்கு மணப்பாறை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று சமூக ஆர்வலர் உலகநாதன் அந்த இடத்தில் கருவேப்பிலையை நடவு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீர் செய்து பொதுமக்களின் நலனைக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.1
- Sri Kanna Public School - CBSE Chinthamani - Puliyangudi Tenkasi1
- தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை செல்வதற்காக இன்று (ஏப்.29) மதுரை விமான நிலையம் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் பிரபா நாச்சியார் அவர்கள் தமிழ்நாடு அரசு என்னும் சீல்டு வழங்கி மீண்டும் 2.0 ஆட்சி தொடர வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் அக்ரி கணேசன் அசோகா சின்னம் பொறித்த தூணினை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். ஏராளமான தொண்டர்கள் காத்திருந்து ஸ்டாலினுக்கு பொன்னாடை மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.1
- இயற்கையும்Vsவாழ்க்கை !!! 25 நாட்கள் கழித்து கொட்டிய மழை கண்டு மகிழுங்கள் !!! #rain #villagelife1
- தாராபுரத்தில் விஜய் மக்களை தெர்மோ மீட்டர் ஆக பயன்படுத்தி சோதித்துப் பார்த்துள்ளார் விஜய்க்கு விழும் வாக்கு நடிகர்களுக்கு விழும் வாக்கு மே 4 ம் தேதி அவருக்கு விழும் வாக்கை வைத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்தடுத்து தேர்தல் வரும் யாரு விஜய் தோத்தாள் உயிரை விட வேண்டாம் தி மு க வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது சொந்த ஊர் மணகடவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மணிப்பூர் நாகலாந்து திரிபுரா சிக்கிம் மாநிலங்களின் கமிட்டி செயலாளர் மா கிறிஸ்தோபர் திலக் எம்பி மக்கள் திரள் இயக்கத்தில் இருந்தும் சாமானிய ஒருவர் மக்களவை வரை சென்றதற்கா தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சாவூர் பேராயர்கள் பாராட்டு விழா தாராபுரம் சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் ஈரோடு கிழக்கு வேட்பாளர் கோபி பழனியப்பன் தாராபுரம் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி முன்னாள் மாவட்ட தலைவர் தென்னரசு வடக்குமாவட்ட தலைவர்கள் செல்வகுமார் தெற்கு மாவட்ட தலைவர் கிட்டுசாமி காங்கிரஸ் கட்சியின் மாநில கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கலா ராணி காண பிரியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் தாராபுரம் மறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலைச் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கள் அவை உறுப்பினர் மா கிறிஸ்டோபர் திலக் MP செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருச்சி திருச்சபை தஞ்சாவூர் திருச்சபை தென்னிந்திய திருச்சபை பேராயர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விஜய் அரசியல் பிரவேசம் ஒரு சினிமா தோற்றமாகவே உள்ளது புது வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு எழுச்சி இருப்பதாக தோன்றுகிறது அது தேர்தல் பிறகு தெரியும் அவருக்கு வாக்குகள் அனைத்தும் நடிகர் என்ற போர்வையில் விழக்கூடியது அவரால் ஆட்சி அமைக்க முடியாது மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட காட்சிகள்உடன் திமுக வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். முன்பு காங்கிரஸ் ஐம்பதுக்கு மேற்பட்ட தொகுதிகள் பெற்று போட்டியிட்டது பாரதிய ஜனதா கட்சி அஞ்சு முதல் 10 சீட்டுகளில் போட்டியிட்டது என்று செய்தியாளர்களின் கேள்விக்கு காங்கிரஸ் 28 ஒன்றிய அரசு 27 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இந்தக் கூட்டணி கொள்கையினால் அடிப்படை கூட்டணி இதுவே வெற்றி பெறும் என்று தெரிவித்தார் சமூக நீதி மையப்படுத்தி மிக முக்கியமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி திமுக காங்கிரஸ் கண்டிப்பா திமுக வெற்றி பெறும் பிஜேபி அதிமுக கூட்டணி மிரட்டி வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே அவர்கள் கூட்டணிக்கு சம்பந்தமில்லை அதிமுகவை பணிய வைத்து வாங்கப்பட்ட தொகுதிகள் எனவே மதசார்பற்ற கூட்டணி திமுக வே வெல்லும் பிஜேபி கூட்டணி கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகத்திற்கு வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார் அரசியல் ஆதாயத்திற்காக 100 வருஷமா பிஜேபி எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சி அதனுடைய தொடர்ச்சி தான் திமுக ஆட்சி பேச வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கும் விஜய் வந்ததால் மாற்றம் ஏதும் இருக்காது கருத்துக்கணிப்புகள் பொய்யாகி உள்ளன விஜய் வந்ததால் மாற்றம் இல்லை என்று கூறவில்லை இருக்கும் அவர் திரைப்படத்தில் நடித்தார் என்பதற்காக வாக்குகள் வாங்குவார் அது எந்த காலத்திலும் திமுகவை கட்டுப்படுத்தாது விஜய் வந்து ஒரு தர்மா மீட்டர் போல் அதை எதற்காக பயன்படுத்துவார்கள் நாடி பார்ப்பதற்கும் உடம்பில் உள்ள உஷ்ணத்தை பார்ப்பதற்கும் அதுபோல் மக்களின் உஷ்ணத்தை நம்பி வந்துள்ளார் விஜய் வந்து கட்சித் தலைவர் என்று நாங்கள் பார்க்கவில்லை அவர் ஒரு தர்மம் மேட்டர் ஆகவே பார்க்கிறோம் இளைஞர்கள் எவ்வாறு அவரை சோதிக்கிறார்கள் என்பதை விஜய் நன்கு அறிந்து அதை போல் செயல்படுகிறார் அவர் வெற்றி பெற அவருக்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்றும் தெரிவித்தார் விஜய்க்கு அஞ்சு சதவீதம் பத்து சதவீதம் 15% வாக்குகள் விழுந்தாலும் அது சித்தாந்தத்தை நிலை நிறுத்தி வாங்கப்பட்ட ஓட்டுகள் அல்ல அவர் சினிமா மோகத்தில் வாங்கப்பட்ட வாக்கு என்றும் தெரிவித்தார் அவர்களிடம் இருக்கும் இளைஞர்கள் தேவையில்லாத முடிவுகள் எடுத்து வருவதாக குறுஞ்செய்திகள் வருகிறது அவர்களை வழிநடத்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நல்வழிப்படுத்தம் முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார் அவருக்கு முன்பு பாராட்டு விழா நடைபெற்றது அனைத்து பேராயர்களும் வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திமுக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.1