ஊத்தங்கரை அருகே தனியார் ஷூ கம்பெனி பேருந்து விபத்தில் தீ பற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள பெங்களூரு பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி செல்லும் பேருந்து அருகே உள்ள கொட்டுகாரம் பட்டி கிராமப் பகுதியில் இருந்து ஊத்தங்கரை வழியாக போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கும் ஷூ கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது ஊத்தங்கரை பகுதியில் உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் பேருந்து செல்லும் பொழுது பேருந்துக்கு பின்னால் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த கார் பேருந்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது இதே வேளையில் எதிர் திசையில் பெங்களூரு பகுதியில் இருந்து திருக்கோவிலூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருசக்கர வாகனம் சாலையில் சென்ற ஷூ கம்பெனி பேருந்தில் சிக்கி 100 மீட்டருக்கு மேல் பேருந்தில் சிக்கி இழுத்து சென்றது இதில் சாலையில் ஏற்பட்ட உராய்வில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிய தொடங்கியது இதில் சிக்கிய பேருந்தும் மல மலவென சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது பேருந்தில் பயணம் செய்த 23 தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயை கட்டு கொண்டு வந்தனர்

- தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த பென்னாகரம் எம்எல்ஏ தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி ஏரியூரில் போடம்பட்டி கிராமத்தில் ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே.மணி நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் வலியுறுத்தினார். அவருடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கிராம கல்வி குழு தலைவர் தேவராஜ் உடனிருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது1
- Post by மணிபாலன். E1
- அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா சுக்காம்பட்டி ஜமீன்தார் நந்தகுமார் பாண்டியர் அவர்கள் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய இராஜ கம்பள சமுதாய பொதுமக்கள்..... இந்நிகழ்ச்சியில் அய்யலூர் தக்காளிக் கடை சுப்பாநாயக்கர்.... கொம்பேறிபட்டி ரெங்கமலை..... மணியக்காரன்பட்டி சின்னத்தம்பி நாயக்கர் நடத்துனர் பொம்மிநாயக்கர் அப்பிநாயக்கன்பட்டி ஆண்டிவேல்சாமி.... மாமரத்துப்பாண்டி பாண்டி எத்தலப்ப நாயக்கனூர் ராமசாமி சின்னச்சாமி சுப்பையா..... ஒண்டிபொம்மன்பட்டி உரக்கடை வடிவேல்.... பஞ்சந்தாங்கி முத்துவேல் மற்றும் பாக்கியராஜ் சுப்பிரமணி அய்யலுகிருஷ்ணா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2026 - 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று புதிய பட்டமளிப்பு விழா நடை பெற்றது. 2022-2023, 2023-2024 ஆண்டுகளில் பட்டம் பெற்ற 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரியில் 22 இளநிலை துறைகள். 14 முதுநிலை துறைகள், 8 ஆராய்ச்சி துறைகள் மூலம் கல்லூரியில் 5840 மாணாக்கர்களும், 66 ஆசிரியர் பணியாளர்களும், 142 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 16 ஆசிரியரியல்லா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2022-2023 ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் 1158 இளநிலை மாணவர்களும், 355 முதுநிலை மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த 5 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 2023-2024-ஆம் ஆண்டில் 1188 இளநிலை மாணவர்களும் 325 முதுநிலை மாணவர்களும் 11 எம்.பில் மாணவர்களும் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்வி ஆண்டிலும் 4 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் கோகண்ணன் அவர்கள் தலைமையேற்று வரவேற்று பேசினார். கல்லூரி அறிக்கையினை முனைவர் விஜயா வாசித்தார். தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா வாழ்த்து துரை வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 35 மாணாக்கர்களும் இவ்விழாவில் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற அனைத்து மாணாக்கர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் செனட் உறுப்பினர் முனைவர் .முருகேசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள். அலுவலகப் பணியாளர்கள், தேசிய மாணவர் படை அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், உடற்கல்வி இயக்குனர், நூலகர், பட்டம் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.1
- ஒகேனக்கலில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் தமிழ்மணி வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய சி பி எஸ் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி காப்பாளர்களுக்கு மாநில பணி மூப்பு அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும் இடைநிலை காப்பாளர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளராக பதவி உயர்வு, கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளரை பி .ஜி அசிஸ்டன்ட் பணி அமைத்துதல், அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விடுதிகளுக்கு தேவையான கோதுமை, எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்து போன்ற உணவுப் பொருட்களை தமிழ்நாடு முதல் பொருள் வணிக கிடங்கில் இருந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ரகுநாத் , அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் நாகராஜ், சட்ட ஆலோசகர் ராஜ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆகியோர் இச்செயல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர் . முடிவில் மாவட்ட செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1