தேனி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை தேனி அருகே சாடையால்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவருவ சிலைக்கு அக்கிராமத்தின் சார்பாக முளைப்பாரி எடுத்தும், தேவராட்டங்கள் ஆடியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , திமுக , அதிமுக , மதிமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் , பல்வேறு சமுதாய தலைவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் கிராமத்தின் சார்பில் தேவராட்டம் சிலம்பாட்டம் உட்பட பல்வேறு கிராமிய கலைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரன், தங்கவேல் ,துரைராஜ் மணிகண்டன் தங்கராஜ் ,சந்திரசேகரன், ஆண்டவர், பொம்மை சாமி, பாண்டியராஜன் லட்சுமணன் , உப்புக் கோட்டை சுருளி மணி மற்றும் கிராம மக்கள் சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை தேனி அருகே சாடையால்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவருவ சிலைக்கு அக்கிராமத்தின் சார்பாக முளைப்பாரி எடுத்தும், தேவராட்டங்கள் ஆடியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , திமுக , அதிமுக , மதிமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் , பல்வேறு சமுதாய தலைவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் கிராமத்தின் சார்பில் தேவராட்டம் சிலம்பாட்டம் உட்பட பல்வேறு கிராமிய கலைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரன், தங்கவேல் ,துரைராஜ் மணிகண்டன் தங்கராஜ் ,சந்திரசேகரன், ஆண்டவர், பொம்மை சாமி, பாண்டியராஜன் லட்சுமணன் , உப்புக் கோட்டை சுருளி மணி மற்றும் கிராம மக்கள் சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- *தேர்தல் ஓட்டுக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவையை அரசு வழங்கியுள்ளது* *அரசு முறையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயத்தால் ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்ய தயாராக உள்ளனர்* *இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி* இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுகுழு கூட்டம் இன்று தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் மாநிலத் தலைவர் மணலி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் கலந்துகொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பின்ன செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர் கூறுகையில் ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடைவிதித்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஆந்திர அரசாங்கமே பிரத்யோகமாக செயலியை உருவாக்கியுள்ளது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் அதேபோல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார் தொடர்ந்து 13 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமலே உள்ளது அதனால் தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தேர்தல் வாக்குக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவை கொடுக்கிறது அரசு இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மீட்டர் கட்டணம் முறையாக இருந்தால் பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்ய தயாராக இருக்கின்றார்கள் எனவே தமிழக அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்தார்1
- பழனி: அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து- தென்னை மரத்தில் தீ பிடித்தது எரிந்ததால் பரபரப்பு பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளில் தீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் தீம் மல மலவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரியத் துவங்கியது. தென்னை மரம் தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பழனி தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.1
- வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலை சாலையூர் நால்ரோடு அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடியாக காணப்படுவதால் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- AI விடியோ. சிரிக்க மட்டும்.1
- திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.1
- புதிய குடிநீர் தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியானது கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதனை குடிநீருக்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது குடிநீருக்காக வெகுதூரம் சென்று எடுத்து வர வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் தொட்டியை அகற்றம் செய்து புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.1
- *பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் (AIYF)* அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் ரயில்வே துறை, வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து இளைஞர் விரோதத்திற்கு எதிராக உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை ஈடுபட்டனர் இதனால் தேனி ரயில் நிலைய கதவுகள் மூடப்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் தேனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்1
- திண்டுக்கல் மாவட்டம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்வார்பட்டி, மேற்கு மாரம்பாடி, கிழக்கு மாரம்பாடி, வேடசந்தூர் கடைவீதி, வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடல், விடுதலைபட்டி, அழகாபுரி, கோவிலூர், எரியோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மோளப்பாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் *விடியல் எங்கே* ஆவண தெருமுனை பிரச்சார கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு தலைவர் மு.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் வடக்கு செயலாளர் பழனி வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ஊடகப்பிரிவு செயலாளர் மாரம்பாடி சந்திர சேகர், வேடசந்தூர் நகர செயலாளர் முனியப்பன் வேடசந்தூர் பேரூர்தலைவர் பாலசுப்பிரமணியம் வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- விடுமுறை தினம் என்பதால் திருசெந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணபட்டது.1