*தேர்தல் ஓட்டுக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவையை அரசு வழங்கியுள்ளது* *அரசு முறையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயத்தால் ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்ய தயாராக உள்ளனர்* *இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி* இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுகுழு கூட்டம் இன்று தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் மாநிலத் தலைவர் மணலி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் கலந்துகொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பின்ன செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர் கூறுகையில் ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடைவிதித்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஆந்திர அரசாங்கமே பிரத்யோகமாக செயலியை உருவாக்கியுள்ளது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் அதேபோல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார் தொடர்ந்து 13 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமலே உள்ளது அதனால் தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தேர்தல் வாக்குக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவை கொடுக்கிறது அரசு இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மீட்டர் கட்டணம் முறையாக இருந்தால் பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்ய தயாராக இருக்கின்றார்கள் எனவே தமிழக அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்தார்

- *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது1
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அமெரிக்கா ஏகாதிய பத்தியத்தின் வெறியாட்டத்தை முறியடிப்போம் என்று சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரைகள் மற்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*1
- *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*1
- வேடசந்தூர் கிராமங்களில் கரூர் MP ஜோதிமணி அவர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை குறித்து விளக்கம்..... வேடசந்தூர் ஒன்றியத்தில் கரூர் MP ஜோதிமணி 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்களிடம் கருக்காம்பட்டி, அய்யர்மடம், குட்டம், தேவிநாயக்கன்பட்டி, விருதலைப்பட்டி, கல்வார்பட்டி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி விளக்கமாக பேசினார் இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில மாவட்ட ஒன்றிய கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர் கலந்து கொண்டனர் வேடசந்தூர் கூம்பூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்1
- குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.1
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூர் பகுதியில் அமெரிக்க அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு சார்பில் அமெரிக்கா ஏகாதிபத்திய அதிபர் டிரம்பை கண்டித்தும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவே அமெரிக்க ராணு.வம் கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் வே.ஜெய்ஹிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சா.பாண்டியன் வழக்கறிஞர் மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் அ.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரா.கதிரப்பன், எஸ்.ஈஸ்வரன், என்.பவுன்ராஜா, மற்றும் வைரமுத்து இருதயராஜ், ஸ்டீபன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் திரளாக பங்கேற்று அமெரிக்க அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டு கண்டன உரையாற்றினார்.1