Shuru
Apke Nagar Ki App…
*திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
Dindigul Prakash
*திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ஆண்டிபட்டி மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர் வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் விழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO) புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.1
- நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.1
- பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.1
- *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது1
- நாம் வாங்கும் காலண்டர் எவ்வளவு பேர் உழைப்பில் எவ்வாறு உருவாகிறது என்று பாருங்கள்.1