Shuru
Apke Nagar Ki App…
இசை மழை.................................................
NAMADHU ARASU(Krishna M Com)
இசை மழை.................................................
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினரின் 11 வது வேலை நிறுத்த தொடர் போராட்டத்தினால் நீட் தேர்வு, ஓ பி சி சான்று, பட்டா மாற்றம் ,மாணவர்களுக்கான சான்றிதழ், சட்ட ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 190 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அழைத்து பேசாவிட்டால் போராட்டங்கள் தீவிர நிலையை எட்டும் என தமிழக அரசுக்கு ஃபெரா அமைப்பினர் எச்சரிக்கை. _________ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் (FERA), வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கூட்டமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான 9 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் 11 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். ஃபெரா அமைப்பினரின் எந்த விதமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றாததால் 11வது நாளாக நடைபெறுகின்ற வேலை நிறுத்த போராட்டத்தால் நீட் தேர்வு, ஓ பி சி சான்று, பட்டா மாற்றம் ,மாணவர்களுக்கான சான்றிதழ், சட்ட ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் சார்ந்த பல பிரச்சினைகள் முடித்து தர முடியாத நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிடவும், வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுவதையும், களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதையும் உயர் அதிகாரிகள் முற்றிலும் கைவிட வேண்டும். வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் , கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட்டு நிரந்தர அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபெரா அமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 190 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒன்பது அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு அழைத்து பேசாவிட்டால் நாளை முதல் போராட்டம் தீவிர நிலையை ஏற்றும் என தமிழக அரசுக்கு ஃபெரா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். பேட்டி. செண்பகம் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் மாவட்ட தலைவர்2
- Post by M. JAYARAMAN1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜன அள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா, அம்பிகா, ரமணி, சுமித்ரா, விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ், சுமித்ரா, கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லண்டன்பேட்டை, BSNL அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ-37,50,000/- (முப்பத்தி ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பிலான உழைப்பாளர் நலக் கூடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்அவர்கள்குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.1
- பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா ; பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியின் பரிசளிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் T.R. அன்பழகன், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர கழக செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கேக்வெட்டி கொண்டாடினார், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுந்தரம், குட்டி, கேசவன், சௌந்தர், புஷ்பராஜ், ராஜி,பாபு ,அப்புசாமி, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1