logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பூடான் நாட்டில் நடைபெறும் #லங்காடி விளையாட்டு போட்டியில் #இந்திய அணிக்காக விளையாட மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #பூடான் நாட்டில் நடைபெறும் #லங்காடி விளையாட்டு போட்டியில் #இந்திய அணிக்காக விளையாட ராமநாதபுரம் மாவட்டம் #முதுகுளத்துாரை சேர்ந்த தேவசித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, -பூடான் அணிகளுக்கு இடை யிலான மூன்று போட்டி களைக் கொண்ட லங்காடி போட்டி பூடான் நாட்டில் அக்.,11 முதல் 14 வரை நடைபெற உள்ளது. மஹாராஷ்டிராவில் தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதுகுளத்துாரை சேர்ந்த தேவசித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதே போன்று மஹாராஷ்டிரா, குஜராத், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 வீரர்கள் லங்காடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு லங்காடி குழுமத் தலைவர் பாலு, தேர்வுக் குழு தலைவர் பாலசுந்தரம், கார்த்திக் வாழ்த்து தெரிவித்தனர். பூடான் நாட்டில் நடைபெறும் லங்காடி போட்டி யில் வெற்றி பெற்று இந்திய அணிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என வீரர்கள் தேவசித்தம், சரண் கூறினர்.

1 hr ago
user_SIMMA
SIMMA
Engineer இராமநாதபுரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
1 hr ago
a0338d24-252a-4bfc-ad8c-043a701afa0e

பூடான் நாட்டில் நடைபெறும் #லங்காடி விளையாட்டு போட்டியில் #இந்திய அணிக்காக விளையாட மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #பூடான் நாட்டில் நடைபெறும் #லங்காடி விளையாட்டு போட்டியில் #இந்திய அணிக்காக விளையாட ராமநாதபுரம் மாவட்டம் #முதுகுளத்துாரை சேர்ந்த தேவசித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, -பூடான் அணிகளுக்கு இடை யிலான மூன்று போட்டி களைக் கொண்ட லங்காடி போட்டி பூடான் நாட்டில் அக்.,11 முதல் 14 வரை நடைபெற உள்ளது. மஹாராஷ்டிராவில் தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதுகுளத்துாரை சேர்ந்த தேவசித்தம், மதுரையை சேர்ந்த சரண் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதே போன்று மஹாராஷ்டிரா, குஜராத், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 வீரர்கள் லங்காடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு லங்காடி குழுமத் தலைவர் பாலு, தேர்வுக் குழு தலைவர் பாலசுந்தரம், கார்த்திக் வாழ்த்து தெரிவித்தனர். பூடான் நாட்டில் நடைபெறும் லங்காடி போட்டி யில் வெற்றி பெற்று இந்திய அணிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என வீரர்கள் தேவசித்தம், சரண் கூறினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.​அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.​இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    1
    கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்!
திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.​அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.​இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு! ​ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ​இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​"பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். ​தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. ​இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது. ​
    1
    சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு
சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு!
​ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
​இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​"பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
​தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
​இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது.
​
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • காரைக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    1
    காரைக்குடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....! விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர் அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும் லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை, திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது விஜய் விபத்தில் முதலமைச்சரானவர் 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார் அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார் தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா? பலம் பொருந்திய அதிமுக, மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா? அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள் தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம் தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் தவெகவினர் யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்? ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம் இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக ஏழை மாணவர்கள் இன்று மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது இதில் ஏதாவது ஒரு வரலாறு திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா? தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள் தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை, விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள் தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள் தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள் இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர் அதிமுகதான் மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
    1
    தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால்  உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....!

விருதுநகர் மாவட்டம் 
சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர்
அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும்  எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும்  லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் 
அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் 
ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் 
பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் 
அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை
கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை,  திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது 
விஜய் விபத்தில் முதலமைச்சரானவர்
107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது
தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது
ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார்
அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம்,  ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார்
தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்
சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது
சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள்
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா?
பலம்  பொருந்திய அதிமுக,  மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக
அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா?  
அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் 
பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் 
பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் 
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது 
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை
பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள்
தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது 
அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது
அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம்
தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால்  உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் 
தவெகவினர்  யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், 
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை 
ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க
லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் 
இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்?
ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை
தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்
திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது 
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம்
இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது
முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக 
ஏழை மாணவர்கள் இன்று  மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான்
இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது
இதில் ஏதாவது ஒரு வரலாறு  திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா?
தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை
தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள்
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள்
தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை,
விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 
110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் 
ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை
தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள்
தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்
தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள்
இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் 
அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி
அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது
அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர்
அதிமுகதான் மக்களுக்கான இயக்கம்
அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே  தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை 
மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை
ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது
வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    3 hrs ago
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது
    1
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார்  தெரிவித்துள்ளார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார்  தெரிவித்துள்ளார்.”
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    1
    முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து
முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து
32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.