லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு தரமான கண் சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய பிரிவு கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சிந்த்ரா வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 'லோட்டஸ் ஆப்டிக்' புதிய கிளை கோயம்புத்தூரில் அறிமுகம் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு தரமான கண் சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய பிரிவு கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சிந்த்ரா வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் தமிழ்நாடு மாநில இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிக்குமார், இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சங்கீதா சுந்தரமூர்த்தி, இயக்குநர் டாக்டர் கே.எஸ். ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லோட்டஸ் ஆப்டிக் மூலம் கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடுகளுக்கான தீர்வுகள் மற்றும் நவீன கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 30, 2026 வரை நிறுவன முத்திரை கொண்ட கண்ணாடி சட்டகங்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வைத் திருத்த அறுவை சிகிச்சை, விழித்திரை, கண் அழுத்த நோய் மற்றும் கருவிழி உள்ளிட்ட பல்வேறு கண் மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு தரமான கண் சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய பிரிவு கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சிந்த்ரா வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 'லோட்டஸ் ஆப்டிக்' புதிய கிளை கோயம்புத்தூரில் அறிமுகம் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு தரமான கண் சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய
பிரிவு கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சிந்த்ரா வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் தமிழ்நாடு மாநில இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிக்குமார், இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சங்கீதா சுந்தரமூர்த்தி, இயக்குநர் டாக்டர் கே.எஸ். ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லோட்டஸ் ஆப்டிக் மூலம் கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடுகளுக்கான தீர்வுகள்
மற்றும் நவீன கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 30, 2026 வரை நிறுவன முத்திரை கொண்ட கண்ணாடி சட்டகங்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வைத் திருத்த அறுவை சிகிச்சை, விழித்திரை, கண் அழுத்த நோய் மற்றும் கருவிழி உள்ளிட்ட பல்வேறு கண் மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
- அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் வருசநாடு அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருசநாடு அருகே அமைந்துள்ள அரண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. அதனையடுத்து இன்று காலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர் பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவில் வருசநாடு மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.1
- வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow 💆♂️ உங்கள் உடலுக்கு ஒரு சிறிய ஓய்வு... உங்கள் மனதுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சி! ✨ நீண்ட நேர வேலை, பயண சோர்வு, உடல் இறுக்கம், மன அழுத்தம்—இவற்றிலிருந்து சிறிது நேரம் விடுபட வேண்டுமா? Erode Massage Center-ல் தரமான, சுத்தமான மற்றும் தொழில்முறை மசாஜ் சேவையை அனுபவியுங்கள். ✅ Professional Massage ✅ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✅ சுத்தமான & அமைதியான சூழல் 💰 ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking & Enquiry: 063854 43602 இன்றே உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து புத்துணர்ச்சியை உணருங்கள்! 🌿 #ErodeMassageCenter #Erode #MassageTherapy #Wellness #Relax #StressRelief #DeepTissueMassage #BodyRelaxation #TamilNadu #SelfCare #ProfessionalMassage #ErodeBusiness #HealthyLiving #BookNow1
- நேபாளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தேனி சேர்ந்த மூன்று பேரை மீட்டு தரக் கோரி *நேபாளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களைக் கண்டறிந்து மீட்டு தரக் கோரி -* *குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு* தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த செல்வம், அவரின் மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகிய மூன்று பேரும் கடந்த 14ஆம் தேதி ஆன்மீக சுற்றுலாவுக்காக நேபாளில் கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் நேபாலில் நேற்று ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும், சிலர் காணாமல் போய் இருப்பதாகவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேனியில் இருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்ற செல்வம் மற்றும் அவரின் மனைவி, தாய் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களை கண்டறிந்து மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் கடந்த செவ்வாய்க்கிழமை வரை தற்போது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், வெள்ள பாதிப்புக்கு பின்பு தங்களால் தொடர்பு கொள்ளவும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் மகாதேவ் கைலாசா யாத்திரை செல்வதற்காக 49 நபர்களுடன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களது குடும்பத்தினரை கண்டுபிடித்து தரக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர் பேட்டி - வீரக்குமார்1
- கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார். 2