Shuru
Apke Nagar Ki App…
Roman Reigns
More news from தமிழ்நாடு and nearby areas
- பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கருகாவூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திமுக ஒன்றிய செயலாளர்கள். பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன். நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் பாபநாசத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிஅய்யாராசு, துரைமுருகன், முன்னாள் தொகுதி பொறுப்பாளர் கே.வீ.கலைச்செல்வன். மற்றும் திமுக, காங்கிரஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1
- குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.1
- மணப்பாறை அருகே நடைபெற்ற தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி,கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நாய்க்கா் இன மக்களின் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி, கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல், அங்கப்பிரதட்சணம், ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மாலையில் நாய்க்கா் இன மக்களின் எருது விடும் நிகழ்ச்சி, தேவராட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.1
- Post by Roman Reigns1
- கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.1
- தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். இதில்,பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. உடனடியாக விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி அவரை தூக்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.1