மணப்பாறையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்ட மன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும் தற்போதைய எம் எல் ஏவுமான ப. அப்துல் சமது அவர்களுக்கு திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 5000 க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அப்துல் சமதுக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு தந்தனர். முன்னதாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் திரு உருவ சிலைக்கு வேட்பாளர் ப. அப்துல் சமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பொத்த மேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் பின்னர் அங்கிருந்து பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் அதன் பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா சிலையிலும் மாலை அணிவித்து பொதுமக்கள் மத்தியில் ப. அப்துல் சமத் எம். எல்.ஏ வாக இருந்த போது தான் செய்த மக்கள் நல பணிகளை விளக்கி பேசி மீண்டும் தமிழகத்தில் 2.0 திமுக சிறப்பான ஆட்சி அமையவும் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் தமக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் திமுக , காங்கிரஸ், தேமுதிக, மமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம் மஜக, தமிழர் தேசம் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மிக பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
மணப்பாறையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்ட மன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும் தற்போதைய எம் எல் ஏவுமான ப. அப்துல் சமது அவர்களுக்கு திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 5000 க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அப்துல் சமதுக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசு
வெடித்து சிறப்பான வரவேற்பு தந்தனர். முன்னதாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் திரு உருவ சிலைக்கு வேட்பாளர் ப. அப்துல் சமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பொத்த மேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் பின்னர் அங்கிருந்து பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க மணப்பாறை நகரின்
முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் அதன் பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா சிலையிலும் மாலை அணிவித்து பொதுமக்கள் மத்தியில் ப. அப்துல் சமத் எம். எல்.ஏ வாக இருந்த போது தான் செய்த மக்கள் நல பணிகளை விளக்கி பேசி மீண்டும் தமிழகத்தில் 2.0 திமுக
சிறப்பான ஆட்சி அமையவும் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் தமக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் திமுக , காங்கிரஸ், தேமுதிக, மமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம் மஜக, தமிழர் தேசம் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மிக பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
- விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி1
- மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.1
- குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லேலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது. சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.1
- சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்2
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.1
- விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.1