திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குப்பை கிடங்கில் தீ பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில்(இன்று ஜுலை 31)மர்மநபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்பைகள் தொடர்ந்து எரிந்து, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை வெளியேறி வருகிறது. இந்த புகை, சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும் சூழ்ந்ததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பார்வைத்திறன் குறைந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அருகில் வசிக்கும் பொதுமக்களும் புகையால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை முழுமையாக அணைத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குப்பை கிடங்கில் தீ பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில்(இன்று ஜுலை 31)மர்மநபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்பைகள் தொடர்ந்து எரிந்து, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை வெளியேறி வருகிறது. இந்த புகை, சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும் சூழ்ந்ததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பார்வைத்திறன் குறைந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அருகில் வசிக்கும் பொதுமக்களும் புகையால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை முழுமையாக அணைத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
- பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.2
- தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள். *காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்* ------------------------------- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு..! தருமபுரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 169 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 7,095 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைப் பட்டா பெறுவதற்காக பழங்குடியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை (Gram Sabha), வன உரிமைக் குழு (FRC), துணை மாவட்ட அளவிலான குழு (SDLC) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் வன உரிமைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!! 000 கன்னிவாடி அருகே மழை வேண்டி மக்கள் நோய்நொடி இன்றி வாழ வினோத திருவிழா!! உயிருடன் இருப்பவரை இறந்தவர் போல் தேரில் அமர வைத்து வீதி உலா வந்த கிராம மக்கள்!!!1