Shuru
Apke Nagar Ki App…
தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
SARAVANAN K
தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
More news from தமிழ்நாடு and nearby areas
- TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்4
- கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர். வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது. போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை வேயப்பட்டது. இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை1
- திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.1
- திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழாவாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது1
- தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்1
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1