Shuru
Apke Nagar Ki App…
மேட்டூர் அணையின் இன்றைய (மார்ச்.11) நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) நீர்மட்டம்: 85.295 அடி. 2) நீர்வரத்து: வினாடிக்கு 61 கன அடியாக நீடிப்பு. 3) நீர் இருப்பு: 47.438 டி.எம்.சி. 4) நீர் திறப்பு: 2500 கன அடி ஆகும். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்லக் குறைந்து வருகிறது.
Srianand
மேட்டூர் அணையின் இன்றைய (மார்ச்.11) நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) நீர்மட்டம்: 85.295 அடி. 2) நீர்வரத்து: வினாடிக்கு 61 கன அடியாக நீடிப்பு. 3) நீர் இருப்பு: 47.438 டி.எம்.சி. 4) நீர் திறப்பு: 2500 கன அடி ஆகும். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்லக் குறைந்து வருகிறது.
More news from Salem and nearby areas
- மேட்டூர் அணையின் இன்றைய (மார்ச்.11) நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) நீர்மட்டம்: 85.295 அடி. 2) நீர்வரத்து: வினாடிக்கு 61 கன அடியாக நீடிப்பு. 3) நீர் இருப்பு: 47.438 டி.எம்.சி. 4) நீர் திறப்பு: 2500 கன அடி ஆகும். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்லக் குறைந்து வருகிறது.1
- நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்1
- தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்1
- Post by Lingaraju mc6
- Post by அன்பரசு1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.1