Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளன.
Natarajan Pitchaimani
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளன.
More news from தமிழ்நாடு and nearby areas
- 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து ஏராளமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் பொள்ளாச்சி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.4
- அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.1
- கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஸ்ரீ மங்களம் ஹோட்டலில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் ஆகிய அமைப்புகளின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் தலைவராக லயன் பி. ஷோபியா, வட்டார தலைவியாக லயன் எம். ராஜாத்தி, செயலாளராக லயன் ஆர். ராமலட்சுமி, பொருளாளராக லயன் சரண்யா, நிர்வாகப் பொறுப்பாளராக லயன் கீதா மற்றும் முதலாம் துணைத் தலைவராக லயன் சைனிலா ரூபி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் தலைவராக லயன் வழக்கறிஞர் வி. குருசாமி, PMJF பதவியேற்றார். இரு சங்கங்களின் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட முன்னாள் கவுன்சில் தலைவர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை, PNJF பதவியேற்பு அலுவலராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மல்டிபிள் கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், PMJF புதிய உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்து வைத்தார். இந்த விழாவில் ரீஜியன், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டங்களின் கீழ், ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ₹1,000 மதிப்புள்ள பள்ளிப் பைகளும், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பணியிலும் செய்தித் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் காரியாபட்டி பகுதி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் எம். புதூரில் உள்ள தமிழக அரசின் வாழைப்பழம் பதப்படுத்தும் குடோனை உடனடியாக திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குடோன் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வந்துள்ள தமிழக அரசு போர்க்கள அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் இரண்டு பாம்புகள் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிட்னி விளையாட்டு மைதானத்திற்கு பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் விளையாடுவதற்கும் வந்திருந்தனர். அப்போது மைதானத்தின் புதர் பகுதியில் சலசலப்பு சத்தம் கேட்டதை அடுத்து, அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், இரண்டு சாரைப்பாம்புகள் தங்களை மறந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்புகள் விளையாடுவதை இடையூறு செய்யாமல் சிறிது நேரம் காத்திருந்தனர். அதன்பின்னர், அந்த இரு சாரைப்பாம்புகளையும் பத்திரமாக உயிரோடு பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன. இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- சிவகங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், இளையான்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இந்த நால்வரும் பிடிபட்டனர். கைதானவர்களிடமிருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மலேசியாவிற்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக “குருவிகள்” என்ற பெயரில் கடத்தல் காரியங்களில் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1