logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஸ்ரீ மங்களம் ஹோட்டலில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் ஆகிய அமைப்புகளின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் தலைவராக லயன் பி. ஷோபியா, வட்டார தலைவியாக லயன் எம். ராஜாத்தி, செயலாளராக லயன் ஆர். ராமலட்சுமி, பொருளாளராக லயன் சரண்யா, நிர்வாகப் பொறுப்பாளராக லயன் கீதா மற்றும் முதலாம் துணைத் தலைவராக லயன் சைனிலா ரூபி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் தலைவராக லயன் வழக்கறிஞர் வி. குருசாமி, PMJF பதவியேற்றார். இரு சங்கங்களின் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட முன்னாள் கவுன்சில் தலைவர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை, PNJF பதவியேற்பு அலுவலராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மல்டிபிள் கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், PMJF புதிய உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்து வைத்தார். இந்த விழாவில் ரீஜியன், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டங்களின் கீழ், ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ₹1,000 மதிப்புள்ள பள்ளிப் பைகளும், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பணியிலும் செய்தித் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் காரியாபட்டி பகுதி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

1 hr ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
1 hr ago

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஸ்ரீ மங்களம் ஹோட்டலில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் ஆகிய அமைப்புகளின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் தலைவராக லயன் பி. ஷோபியா, வட்டார தலைவியாக லயன் எம். ராஜாத்தி, செயலாளராக லயன் ஆர். ராமலட்சுமி, பொருளாளராக லயன் சரண்யா, நிர்வாகப் பொறுப்பாளராக லயன் கீதா மற்றும் முதலாம் துணைத் தலைவராக லயன் சைனிலா ரூபி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் தலைவராக லயன் வழக்கறிஞர் வி. குருசாமி, PMJF பதவியேற்றார். இரு சங்கங்களின் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட முன்னாள் கவுன்சில் தலைவர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை, PNJF பதவியேற்பு அலுவலராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மல்டிபிள் கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், PMJF புதிய உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்து வைத்தார். இந்த விழாவில் ரீஜியன், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டங்களின் கீழ், ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ₹1,000 மதிப்புள்ள பள்ளிப் பைகளும், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பணியிலும் செய்தித் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் காரியாபட்டி பகுதி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

More news from Virudhunagar and nearby areas
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஸ்ரீ மங்களம் ஹோட்டலில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் ஆகிய அமைப்புகளின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் தலைவராக லயன் பி. ஷோபியா, வட்டார தலைவியாக லயன் எம். ராஜாத்தி, செயலாளராக லயன் ஆர். ராமலட்சுமி, பொருளாளராக லயன் சரண்யா, நிர்வாகப் பொறுப்பாளராக லயன் கீதா மற்றும் முதலாம் துணைத் தலைவராக லயன் சைனிலா ரூபி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் தலைவராக லயன் வழக்கறிஞர் வி. குருசாமி, PMJF பதவியேற்றார். இரு சங்கங்களின் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட முன்னாள் கவுன்சில் தலைவர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை, PNJF பதவியேற்பு அலுவலராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மல்டிபிள் கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், PMJF புதிய உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்து வைத்தார். இந்த விழாவில் ரீஜியன், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டங்களின் கீழ், ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ₹1,000 மதிப்புள்ள பள்ளிப் பைகளும், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பணியிலும் செய்தித் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் காரியாபட்டி பகுதி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஸ்ரீ மங்களம் ஹோட்டலில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் ஆகிய அமைப்புகளின் 2026–2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், லயன்ஸ் கிளப் ஆஃப் காரியாபட்டி ஜாஸ்மின் தலைவராக லயன் பி. ஷோபியா, வட்டார தலைவியாக லயன் எம். ராஜாத்தி, செயலாளராக லயன் ஆர். ராமலட்சுமி, பொருளாளராக லயன் சரண்யா, நிர்வாகப் பொறுப்பாளராக லயன் கீதா மற்றும் முதலாம் துணைத் தலைவராக லயன் சைனிலா ரூபி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், லயன்ஸ் கிளப் ஆஃப் அருப்புக்கோட்டை ராயல் தலைவராக லயன் வழக்கறிஞர் வி. குருசாமி, PMJF பதவியேற்றார். இரு சங்கங்களின் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்ட முன்னாள் கவுன்சில் தலைவர் லயன் டாக்டர் பி. அய்யாதுரை, PNJF பதவியேற்பு அலுவலராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மல்டிபிள் கவுன்சில் தலைவர் லயன் கே.ஜி. பிரகாஷ், PMJF புதிய உறுப்பினர்களை லயன்ஸ் இயக்கத்தில் இணைத்து வைத்தார். இந்த விழாவில் ரீஜியன், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டங்களின் கீழ், ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ₹1,000 மதிப்புள்ள பள்ளிப் பைகளும், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பணியிலும் செய்தித் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் காரியாபட்டி பகுதி பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை மாலையில், சூரிய வார பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டின் போது, ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி எழுந்தருளி, திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தனர். இத்துடன் பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாகக் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை மாலையில், சூரிய வார பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டின் போது, ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி எழுந்தருளி, திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தனர். இத்துடன் பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாகக் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    59 min ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    2
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.

வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் கௌதம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். இந்த ரோந்துப் பணியின் போது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், எங்கு தவறு நடந்தாலும் அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
    1
    தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் கௌதம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். இந்த ரோந்துப் பணியின் போது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், எங்கு தவறு நடந்தாலும் அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    1
    தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.
    1
    அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    12 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.