Shuru
Apke Nagar Ki App…
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றன. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
Just Now Karimangalam
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றன. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றன. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி சோலையூர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் நவகிரக மூர்த்திகள் ஆலய அஷ்டபந்த மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது காலையில் சுவாமிக்கு மகா அஷ்டபந்த ஹோமம் மற்றும் திருமாங்கல்யதாரணம் ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒலி காலம் பகுதியில் அமைந்துள்ள அத்வைத் பள்ளியில் பல்வேறு போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை தட்டிச் சென்றனர். ஓசூர் அத்வைத் பள்ளி மாணவர்களின் இந்த சிறப்பான நடன நிகழ்ச்சியைக் கண்டு அங்கிருந்த பெற்றோர்கள் அனைவரும் ரசித்துப் பாராட்டினர்.1
- சேலம் காந்தி மைதானத்தில் இன்று லையோ ஈவன்ஸ் என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் குழந்தைகளை வைத்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. போதைப்பொருள் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசியை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருவதாக இந்த தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சேலத்தில் வித்தியாசமான முறையில் குழந்தைகளைக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.1
- தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொப்பிடி கிராமத்தில் கிணற்று நீர் பாய்ச்சுவது தொடர்பான தகராறில், சித்தியை இரும்பு சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி (40) ஆகியோருக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்களுக்கும், வெங்கடேசனின் சகோதரர் மாரிமுத்துவின் மகனான சென்ட்ரிங் கூலித் தொழிலாளி செந்தில்அரசுக்கும் (28) கிணற்றிலிருந்து விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தில்அரசு, ஆத்திரத்தில் தான் சென்ட்ரிங் வேலைக்கு பயன்படுத்தும் இரும்பு சுத்தியால் தனலட்சுமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்அரசைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில், ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமையான இன்று காசி விஸ்வநாதர், சமேத விசாலாட்சி அம்மையார் மற்றும் நந்தி பகவானுக்குப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில், அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்ட பின்னர், மாலை அணிவித்து, உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளாக வருகை தந்த பக்தர்கள், நந்தி பகவானை வணங்கி அவரது அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.1