திருவொற்றியூரில் சமுதாய வளைகாப்பு விழா – கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பான மகப்பேற்றையும் உறுதி செய்யும் நோக்கில் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் கஸ்தூரி சங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்வை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய கே.பி. சங்கர், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்தும் பெண்களுக்கு செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார் இந்நிகழ்வில் ஆகாஷ் மருத்துவமனை இயக்குநர் செல்வராஜ் குமார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிரியா செல்வராஜ் குமார், ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், சத்தான உணவு பழக்கங்கள், கர்ப்பகால பராமரிப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பான மகப்பேறு குறித்து விரிவான விளக்கங்களையும் பயனுள்ள அறிவுரைகளையும் வழங்கினர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல கர்ப்பிணிப் பெண்கள் இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த சமுதாய வளைகாப்பு விழா பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 17.04.2026 காலை முதல் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியானது போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் போது உடன் போளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 16) வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது இந்த பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பூஷ்ணா குமார், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் ரேவதி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்1
- பெண்கள் ஆர்த்து எடுத்து புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அதிமுக சார்பாக அருண்மொழிதேவன் எம் எல் ஏ மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். புவனகிரி தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பொதுமக்கள் இடத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வரும்பொழுது அந்த ஒரு கிராம பெண்கள் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு ஆர்த்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். பின்பு அதிமுக தேர்தல் வாக்கு உறுதி குறித்து பொதுமக்களிடத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.1
- சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.1
- கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட ராசிவீதி,செட்டியம்பட்டி, ரிஜிஸ்டர்ஆபீஸ்,திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கை சின்னத்திற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும் விளக்கிவாக்குகளை சேகரித்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1