மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம் அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம் அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. : முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு. அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார். சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.1
- கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள்,இளைஞரணியினர்,தகவல்தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து சார்பு நிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்1
- சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது ஜன சதாப்தி ரயிலை சிதம்பரத்தில் நீட்டிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர் அதனை செயல்படுத்தவில்லை எனும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்தனர் அதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்பு ரயில்வே துறை அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற்று வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கூறியுள்ளனர் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்1
- சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 சிலைகள் இப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடும் கோடை வெப்பத்தால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் எப்போதும் ஆழமாக இருக்கும் குமார உடைப்பு வாய்க்கால் பள்ளம் ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலுமாக வறண்டுவிட்டன. இதனால் சிலைகளை கரைப்பதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பக்தர்கள் நீர்நிலைகளைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் மாற்று ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திடம் பேசி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 6-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு வந்து குமார உடைப்பு பள்ளத்தில் செயற்கையாக நிரப்பினர். நீர்நிலைகள் வறண்ட நிலையில், காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாகக் கரைக்கப்பட உள்ளன.1
- மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம் அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1