Shuru
Apke Nagar Ki App…
கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
A. Mathankumar
கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கும்பகோணத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வானம் கருப்பு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியதுடன் மழை பெய்யத் தொடங்கி, கன மழையாக கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் கும்பகோணம் பூமி குளிர்ந்து விட்டது. இந்த மழையால் பெரிதும் பொருட்களை விற்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கன மழை மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சிதம்பரம், செப், 16 சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனார் கல்விக்க ழகத் தலைவருமான கே.ஐ.மணி ரத்தினம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையான அம் பேத்கர் சிலை திங்கள்கிழமை மர் மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாகஅதேபகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கே.ஐ. மணிரத் தினம், சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கர் சிலையை செவ்வாய்க்கி ழமை நேரில் பார்வையிட்டு, சம் பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'சேதப்படுத்தப் பட்டுள்ள சிலைக்குப் பதில், அதே இடத்தில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் புதிய வெண்கல சிலை அமைக்கப்படும் என்றார். நிகழ்ச் சியில் காங்கிரஸ் கட்சியின் இளை ஞர் அணி மாநில துணைத்தலை வர் கமலக்கண்ணன் மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- மாணிக்க விநாயகர் கோவில் 29 ம் ஆண்டு சதுர்த்தி விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.விழா கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான கண்ணன்,முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.1
- சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு சேத்தியாத்தோப்பில் என்எல்சி தண்ணீர் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க போலீசாரின் சிறப்பு ஏற்பாடு கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 சிலைகள் இப்பகுதியை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடும் கோடை வெப்பத்தால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் எப்போதும் ஆழமாக இருக்கும் குமார உடைப்பு வாய்க்கால் பள்ளம் ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலுமாக வறண்டுவிட்டன. இதனால் சிலைகளை கரைப்பதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பக்தர்கள் நீர்நிலைகளைத் தேடி அலைவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் மாற்று ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திடம் பேசி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 6-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு வந்து குமார உடைப்பு பள்ளத்தில் செயற்கையாக நிரப்பினர். நீர்நிலைகள் வறண்ட நிலையில், காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாகக் கரைக்கப்பட உள்ளன.1
- “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇1
- கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.1