மாணிக்க விநாயகர் கோவில் 29 ம் ஆண்டு சதுர்த்தி விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.விழா கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான கண்ணன்,முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.
மாணிக்க விநாயகர் கோவில் 29 ம் ஆண்டு சதுர்த்தி விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.விழா கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான கண்ணன்,முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.
- மாணிக்க விநாயகர் கோவில் 29 ம் ஆண்டு சதுர்த்தி விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.விழா கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான கண்ணன்,முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.1
- தொட்டியத்தில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் கொண்டு வருவதாக தெரிவித்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க முப்பெரும் விழாவில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம்எல்ஏ விக்னேஷ் பேசுகையில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் முசிறி தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து சேர்ப்பது கொடுத்து தீவிர ஆலோசனை செய்து உள்ளதாகவும் 5 வருடங்களில் பல்வேறு திட்ட பணிகளை செய்து முடிப்பதாகவும் தெரிவித்தனர் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறையில் இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்! திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்1
- தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்1
- குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.1
- துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.1