Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதாந்திர கூட்டம், மு. விசுவநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் பேரவையின் நிறுவனர் பாப்பாக்குடி அ. முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக விவேகானந்தர் கேந்திர பாலர் பள்ளி ஆசிரியைகள் மா. விஜயலட்சுமி, ச. சுப்புலெட்சுமி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
S.Maria selvam
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதாந்திர கூட்டம், மு. விசுவநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் பேரவையின் நிறுவனர் பாப்பாக்குடி அ. முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக விவேகானந்தர் கேந்திர பாலர் பள்ளி ஆசிரியைகள் மா. விஜயலட்சுமி, ச. சுப்புலெட்சுமி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . மறைந்த தேமுதிக நிர்வாகிகளான ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- குமரியில் மழை காரணமாக ரப்பர் சேகரிப்பு பணி பாதிப்பு- தொழிலாளர்கள் வேலை இழப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கீரிப்பாறை காளிகேசம் குலசேகரம் திற்பரப்பு சித்திரம் கோடு கடையால் அருமனை செல்லம் துருத்தி பேச்சிப் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் பால் சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.மழை பெய்து வருவதால் ரப்பர் பால் தேங்கும் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.1
- ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்1
- தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையையான கலைத் திருவிழா போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் இன்று நடந்தது1