உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
- தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி சந்தையில் சுமார் 14 மாடுகளை ஈச்சர் மினி வேனில் கேரளா மாநிலத்திற்கு ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் தருமபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வண்டியின் பின் சக்கரம் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது. இந்த வண்டியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோழிக்கோடு மாவட்டம் பாலுசரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக். (42) என்பவர் ஓட்டி வந்தார். விபத்தில் வாகனம் முன்பக்கம் நொறுங்கியது. இதனால் மாட்டிற்கோ, ஓட்டுனருக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அதியமான் கோட்டை அரசு ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் கலெக்டர் சரவணன் ஆய்வு1
- சுட்டெரிக்கும் வெயிலில் ஒய்யாரமாக புள்வெளியில் உலா வந்த கரடி... பொது மக்கள் கண்டு மகிழ்ச்சி ... உதகை அருகே தலைகுந்தா பகுதியில் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் கரடி ஒன்று அங்குள்ள புள்வெளியில் ஒய்யாரமாக அமர்ந்து பின்னர் அந்த பகுதியில் உலா வந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்களும், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கரடியை கண்டு மகிழ்ந்து வீடியோ எடுத்து சென்றனர்.1
- கிருஷ்ணகிரியில் விக்சித் பாரத் இளம் தலைவர்களுக்கான உரையாடல் குறித்த வினாடி வினா போட்டியில் மாணவர்கள் பெருமளவில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மை பாரத் கேந்திரா அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அலுவலர் ராசெட்டி மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மை பாரத் கேந்திரா அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அலுவலர் ராசெட்டி மஞ்சுநாத்., இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் சார்பில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் -2027 ஆன் லைன் வினாடி வினா போட்டி மை பாரத் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.1
- சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.1
- கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.1
- திமுகவிற்கு அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுத்த திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகளை சிதறடிக்க சதி என திமுக மீது குற்றச்சாட்டு1
- நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.2