logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திமுகவிற்கு அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுத்த திருமாவளவன்  விடுதலைச் சிறுத்தைகளை சிதறடிக்க சதி என திமுக மீது குற்றச்சாட்டு

3 hrs ago
user_Periyasamy
Periyasamy
பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
3 hrs ago

திமுகவிற்கு அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுத்த திருமாவளவன்  விடுதலைச் சிறுத்தைகளை சிதறடிக்க சதி என திமுக மீது குற்றச்சாட்டு

More news from தமிழ்நாடு and nearby areas
  • உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    1
    உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார்
தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார்
தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது 
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்
பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதை கண்டித்து, இன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    1
    சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதை கண்டித்து, இன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
    1
    மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    4 hrs ago
  • புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.
    2
    புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார்
தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார்.
அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,
மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    41 min ago
  • கரூர் மாவட்டம், வெள்ளி யணையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கரூர் மாவட்டம், வெள்ளி யணையில்  கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…
    1
    *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS*
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், முள்ளுவாடி கேட் பகுதியில் எலைட் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் மதியம் 3:30 மணிக்கு புகுந்த மர்ம நபர், தான் போலீஸ் எனக்கூறி பாட்டிலை எடுத்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் பாட்டிலை அவரிடம் இருந்து கடுமையாக போராடி கட்டி புரண்டு பாட்டில் புடுங்கிக் கொண்டார். தொடர்ந்து போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர் யாருக்கோ போன் செய்து கடை ஊழியரிடம் கொடுத்தார். ஆனால் முதலில் வாங்க மறுத்த கடை ஊழியர் பின்னர் வாங்கி பேசியதோடு, அந்த மர்ம நபரிடம் போலீஸனை கூறிக்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று விடுவீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பின்னர் பாட்டிலைக் கொடுத்து அனுப்பினார். சீருடை அல்லாமல் கடைக்குள் புகுந்து பாட்டிலை எடுத்ததோடு கடை ஊழியரிடம் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே கடைக்குள் சீருடை அல்லாமல் புகுந்த மர்ம நபர் உண்மையிலே போலீஸ்காரர் தானா அவர் ஏன் கடைக்குள் புகுந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதை ஆசாமிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போது சீருடை அல்லாமல் கணக்கில் புகுந்து பாட்டிலை எடுத்த வீடியோ சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    1
    டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது....
சேலம் டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது....
சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், முள்ளுவாடி கேட் பகுதியில்  எலைட் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 
இந்த கடைக்குள் மதியம் 3:30 மணிக்கு புகுந்த மர்ம நபர், தான் போலீஸ் எனக்கூறி பாட்டிலை எடுத்தார்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் பாட்டிலை அவரிடம் இருந்து கடுமையாக போராடி கட்டி புரண்டு பாட்டில் புடுங்கிக் கொண்டார். 
தொடர்ந்து போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர் யாருக்கோ போன் செய்து கடை ஊழியரிடம் கொடுத்தார். 
ஆனால் முதலில் வாங்க மறுத்த கடை ஊழியர் பின்னர் வாங்கி பேசியதோடு, அந்த மர்ம நபரிடம் போலீஸனை கூறிக்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று விடுவீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பின்னர் பாட்டிலைக் கொடுத்து அனுப்பினார். 
சீருடை அல்லாமல் கடைக்குள் புகுந்து பாட்டிலை எடுத்ததோடு கடை ஊழியரிடம் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
எனவே கடைக்குள் சீருடை அல்லாமல் புகுந்த மர்ம நபர் உண்மையிலே போலீஸ்காரர் தானா அவர் ஏன் கடைக்குள் புகுந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதை ஆசாமிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 
தற்போது சீருடை அல்லாமல் கணக்கில் புகுந்து பாட்டிலை எடுத்த வீடியோ சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தருமபுரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
    1
    தருமபுரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    22 hrs ago
  • சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!.... தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
    1
    சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!....
தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.