Shuru
Apke Nagar Ki App…
சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!.... தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
Rajendran
சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!.... தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- திமுகவிற்கு அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுத்த திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகளை சிதறடிக்க சதி என திமுக மீது குற்றச்சாட்டு1
- உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபுரியில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணி: மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைதார் தருமபரி அரசு மருத்துவ கல்லூரி சார்பில் உலக தற்கொலை தின தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே சரவணன் கொடி அசைத்து துவக்கிவைத்தார் மருத்துவ கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் பேரணியின் நடுவே தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை மருத்துவ அதிகாரி நாகவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர் முடிவில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது1
- மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.1
- *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…1
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- சேலத்தில் அமைச்சர் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!.... தமிழக வெற்றி கழகத்திற்கு மாநில அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல தங்கள் தலைவருக்குமே மிகப்பெரிய பெருமை, இன்றைய நாள் தான் தங்களுக்கு தீபாவளி என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.1
- டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டாஸ்மாக் கடைக்குள் போலீஸ் என கூறி பாட்டிலை எடுத்த நபரும் ஊழியரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.... சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், முள்ளுவாடி கேட் பகுதியில் எலைட் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் மதியம் 3:30 மணிக்கு புகுந்த மர்ம நபர், தான் போலீஸ் எனக்கூறி பாட்டிலை எடுத்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் பாட்டிலை அவரிடம் இருந்து கடுமையாக போராடி கட்டி புரண்டு பாட்டில் புடுங்கிக் கொண்டார். தொடர்ந்து போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர் யாருக்கோ போன் செய்து கடை ஊழியரிடம் கொடுத்தார். ஆனால் முதலில் வாங்க மறுத்த கடை ஊழியர் பின்னர் வாங்கி பேசியதோடு, அந்த மர்ம நபரிடம் போலீஸனை கூறிக்கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று விடுவீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பின்னர் பாட்டிலைக் கொடுத்து அனுப்பினார். சீருடை அல்லாமல் கடைக்குள் புகுந்து பாட்டிலை எடுத்ததோடு கடை ஊழியரிடம் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே கடைக்குள் சீருடை அல்லாமல் புகுந்த மர்ம நபர் உண்மையிலே போலீஸ்காரர் தானா அவர் ஏன் கடைக்குள் புகுந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதை ஆசாமிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போது சீருடை அல்லாமல் கணக்கில் புகுந்து பாட்டிலை எடுத்த வீடியோ சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்1
- தருமபுரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு1