நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில்
போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.2
- சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.1
- தாராபுரத்தில் இடைத்தேர்தல் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மெட்ரோ சிட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ சிட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பெரு விளக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வருவதை ஒட்டி மெட்ரோ சிட்டியை சேர்ந்த பொதுமக்கள் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மெட்ரோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு பெய்த லேசான மலைக்கு சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தாராபுரம் நகரின் 16 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியானது தாராபுரம் நகரோடு இணைந்து காணப்படும் ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியில் ஏற்கனவே என் ஏ எஸ் நகர்,கணபதி நகர்,வள்ளலார் நகர்,சுபலட்சுமி நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி தண்ணீர் சாலை வசதி வேண்டும் என போராடி வந்த நிலையில் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மெட்ரோ சிட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில் மெட்ரோ சிட்டிக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, மற்றும் குப்பை தொட்டி என எந்த அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது இது குறித்து அனைத்து துறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எம்எல்ஏக்கள், அமைச்சர் வரை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறோம் ஆகவே எங்கள் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போட மாட்டோம் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் கூறுகின்றனர்1
- கரூர் மாவட்டம், வெள்ளி யணையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி சந்தையில் சுமார் 14 மாடுகளை ஈச்சர் மினி வேனில் கேரளா மாநிலத்திற்கு ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் தருமபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வண்டியின் பின் சக்கரம் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது. இந்த வண்டியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோழிக்கோடு மாவட்டம் பாலுசரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக். (42) என்பவர் ஓட்டி வந்தார். விபத்தில் வாகனம் முன்பக்கம் நொறுங்கியது. இதனால் மாட்டிற்கோ, ஓட்டுனருக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அதியமான் கோட்டை அரசு ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் கலெக்டர் சரவணன் ஆய்வு1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.1
- நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.2