logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாராபுரத்தில் இடைத்தேர்தல் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மெட்ரோ சிட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ சிட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பெரு விளக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வருவதை ஒட்டி மெட்ரோ சிட்டியை சேர்ந்த பொதுமக்கள் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மெட்ரோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு பெய்த லேசான மலைக்கு சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தாராபுரம் நகரின் 16 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும்  கவுண்டச்சிபுதூர் ஊராட்சியானது தாராபுரம் நகரோடு இணைந்து காணப்படும் ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியில் ஏற்கனவே என் ஏ எஸ் நகர்,கணபதி நகர்,வள்ளலார் நகர்,சுபலட்சுமி நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி தண்ணீர் சாலை வசதி வேண்டும் என போராடி வந்த நிலையில் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மெட்ரோ சிட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில் மெட்ரோ சிட்டிக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, மற்றும் குப்பை தொட்டி என எந்த அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது இது குறித்து அனைத்து துறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எம்எல்ஏக்கள், அமைச்சர் வரை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறோம் ஆகவே எங்கள் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போட மாட்டோம் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் கூறுகின்றனர்

9 hrs ago
user_Jagan
Jagan
தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
9 hrs ago

தாராபுரத்தில் இடைத்தேர்தல் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மெட்ரோ சிட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ சிட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பெரு விளக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வருவதை ஒட்டி மெட்ரோ சிட்டியை சேர்ந்த பொதுமக்கள் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மெட்ரோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு பெய்த லேசான மலைக்கு சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தாராபுரம் நகரின் 16 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும்  கவுண்டச்சிபுதூர் ஊராட்சியானது தாராபுரம் நகரோடு இணைந்து காணப்படும் ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியில் ஏற்கனவே என் ஏ எஸ் நகர்,கணபதி நகர்,வள்ளலார் நகர்,சுபலட்சுமி நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி தண்ணீர் சாலை வசதி வேண்டும் என போராடி வந்த நிலையில் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மெட்ரோ சிட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில் மெட்ரோ சிட்டிக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, மற்றும் குப்பை தொட்டி என எந்த அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது இது குறித்து அனைத்து துறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எம்எல்ஏக்கள், அமைச்சர் வரை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறோம் ஆகவே எங்கள் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போட மாட்டோம் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் கூறுகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்தனர் தேனி மாவட்டம் தலைநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் பெருந்தலைவர் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பள்ளிக்குச் சென்று அங்கு மாணவர்களை வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் குறித்து அறிவுறுத்தினர் இந்த ஆய்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்
    1
    பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்தனர்
தேனி மாவட்டம் தலைநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் பெருந்தலைவர் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர்
அதனைத் தொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பள்ளிக்குச் சென்று அங்கு மாணவர்களை வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் குறித்து அறிவுறுத்தினர்
இந்த ஆய்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
    1
    தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    4
    TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்  தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…
    1
    *பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS*
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Prasanth
    1
    Post by Prasanth
    user_Prasanth
    Prasanth
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    1
    திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    6 hrs ago
  • தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! ​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். ​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு!
​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 
தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன்  அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார்.
​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    1
    தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை
கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார். நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    2
    நம்பியூர் அருகே செல் போன் கோபுரத்தில் ஏ றி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.
நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடசெல்லிபாளையத் தை சேர்ந்தவர் அண்ணுசாமி (வயது 60). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் போதையில் இருந்த அவர், அங்குள்ள ஒருசெல்போன் கோபுரத்தில் ஏறி சிறிது நேரத்தில் டவர் உச்சிக்கு சென்று விட்டார். அதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வருமாறு சத்தமிட்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை, உடனே நம்பியூர் போலீசார் மற்றும் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அண்ணுசாமியை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர், இறங்கி வரமாட்டேன், கீழே குதிக்க போகிறேன் என்று தற் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள், அண்ணுசாமியிடம் நைசாக பேசிக்கொண்டே செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை கீழே கொண்டு வர முயன்றனர். ஆனால், அண்ணுசாமி தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.