logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! ​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். ​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! ​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். ​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    1
    தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    1
    திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    6 hrs ago
  • புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர்.
மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம்  பொதுமக்கள் அதிருப்தி  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது.  ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் 

பொதுமக்கள் அதிருப்தி 


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. 
ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    1
    இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! ​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். ​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு!
​தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
​இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 
தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
​இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
​இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன்  அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார்.
​அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
​விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம் ஜாதி வாரி கணக்கெடுப்பதில் ஏற்படுத்த நினைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகமாவட்ட தலைவர் சுருளிராஜு வரவேற்புரை ஆற்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையும் நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் கண்ணன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் போடி முகமது ஆரிப் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீல கனலன் ஆதித்தமிழர் பேரவை செய்தி தொடர்புத்துறை சுரேஷ் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி தமிழர் கட்சி மாநில அமைப்பாளர் அருந்தமிழர் அரசு மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாநில பொருளாளர் மணிகண்டன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தருண் திராவிட புரட்சி கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்
    1
    தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜாதி வாரி கணக்கெடுப்பதில் ஏற்படுத்த நினைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகமாவட்ட தலைவர் சுருளிராஜு வரவேற்புரை ஆற்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையும் நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் கண்ணன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் போடி முகமது ஆரிப் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீல கனலன் ஆதித்தமிழர் பேரவை செய்தி தொடர்புத்துறை சுரேஷ் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி தமிழர் கட்சி மாநில அமைப்பாளர் அருந்தமிழர் அரசு மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாநில பொருளாளர் மணிகண்டன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தருண் திராவிட புரட்சி கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நத்தம் கல்குவாரியில் அனுமதியை மீறி கல் எடுத்து இயற்கை வளத்தை கடித்து கல்குவாரியின் உரிமையாளரை கண்டித்து போராட்டம் நடத்த தயார் என நத்தம் உரிமையாளர்கள் அறிவித்த நிலையில் அந்த கல்குவார் படத்தை இப்பொழுது நத்தம் குடியிருப்பு பகுதியினர் வெளியீட்டு விட்டனர்
    1
    நத்தம் கல்குவாரியில் அனுமதியை மீறி கல் எடுத்து இயற்கை வளத்தை கடித்து கல்குவாரியின் உரிமையாளரை கண்டித்து போராட்டம் நடத்த தயார் என நத்தம் உரிமையாளர்கள் அறிவித்த நிலையில் அந்த கல்குவார் படத்தை இப்பொழுது நத்தம் குடியிருப்பு பகுதியினர் வெளியீட்டு விட்டனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    6 hrs ago
  • ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். 
சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.