சேலம் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா! ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேலம் தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சேலம் மத்திய மாவட்ட செயலாளர் விஜய் தமிழன் பார்த்திபன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர், இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பார்த்திபனின் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி தங்களின் சட்டமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முதல் கட்ட அமைச்சர்கள் பட்டியலில் பார்த்திபனின் பெயர் இடம் பெறாமல் போனது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பட்டியலில் அவரது பெயர் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அவரது ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சேலம் மேற்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரியான லட்சுமணனுக்கு அமைச்சர் பதவி தர இருப்பதாக கட்சியில் பேசப்பட்டு வருவது சேலத்தில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.1
- திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் முதல்வரானதை வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடியது. காந்தி சிலை முன்பு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.1
- தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.1
- தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகக் கடினம் என்றும், இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.1