Shuru
Apke Nagar Ki App…
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள பாரதி நகர் பகுதியில் இன்று நல்ல மழை பெய்தது.
Namma Ooru Adanai
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள பாரதி நகர் பகுதியில் இன்று நல்ல மழை பெய்தது.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள பாரதி நகர் பகுதியில் இன்று நல்ல மழை பெய்தது.1
- காரைக்குடி மாநகராட்சியில் உள்ள மருதுபாண்டியர் நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக வந்து அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை அடைந்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 17, 2026) பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 85.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விவரங்களின்படி, அன்னவாசலில் 35 மி.மீ, இலுப்பூரில் 19.6 மி.மீ, பொன்னமராவதியில் 6 மி.மீ, குடுமியான்மலையில் 12 மி.மீ, கீரனூரில் 6 மி.மீ, அறந்தாங்கியில் 3.6 மி.மீ, மற்றும் விராலிமலையில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் இன்று (18.06.2026) மாலை சுமார் 3.50 மணியளவில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பமான சூழலுக்கு மத்தியில் பெய்த இந்த எதிர்பாராத மழை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெயிலும் மழையும் ஒரே நேரத்தில் காணப்பட்டதால், வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. காரியாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நிமிடங்கள் நீடித்த இந்த சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.1
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா அல்லது ஏமாற்றம் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 18 அன்று அவர் வெளியிட்ட வீடியோவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள், அரசு வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்துவிடுமோ என்று கவலையுடன் இருப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.1
- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.1