ரயில் சேவையில் நாகை புறக்கணிப்பு ; ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர். நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றனர் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ரயில் சேவையில் நாகை புறக்கணிப்பு ; ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர். நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றனர் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர். நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றனர் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்1
- ஈஞ்சர் விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை1
- கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.1
- *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.1
- அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- நாகை அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழப்பு: நாகை நகர போலீசார் விசாரணை. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே திசையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக இருச்சக்கர வாகன ஓட்டுநர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.அப்போது கீழே விழுந்த வாலிபர் மீது பேருந்து ஏறி இறங்கியதால் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பலியான வாலிபரின் உடலை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (30) என்பது தெரியவந்தது.வேளாங்கண்ணியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்ததும், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு இருச்சக்கர வாகனத்தில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோடிய நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.1