logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி காந்திநகரில் உள்ள தோமையார் ஆலயத்தில், மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குனருமான கென்னடியின் மகள் ஷெகினா மற்றும் ஸ்டெனி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும் தங்கள் மணக்கோலத்திலேயே மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்களின் இந்த பசுமை முயற்சி திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம், மரக்கன்று நடுதல், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் இயக்குனரான கென்னடி, தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். காடுகளின் பரப்பளவை உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மரங்களின் அளவு 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால், சுற்றுச்சூழலை பாதிக்கும் கோனோ கார்பஸ் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் இந்த நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட நீதிபதி இராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, வன உதவி அலுவலர் முனியப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஆறுமுகம் ஆகியோர் மணமக்களின் இந்தச் செயலை நேரில் பாராட்டி வாழ்த்தினர். இவர்களுடன் உடன்குடி பவர் பிளான்ட் உதவி பொறியாளர்கள் அப்துல் பக்கீம், வள்ளியம்மாள், தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் ராஜா, சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் பிரேமலதா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளர் ராமகிஷோர், மேலாளர் சிவக்குமார், தூத்துக்குடி சிப்காட் அதிகாரிகள் லியோ, மேரி, அண்டோ, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை அட்லியா திட்ட மேலாளர் பாலாஜி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் சுதாகர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

3 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
3 hrs ago
91f33109-9bfd-43e8-afec-157f0b618cb6

தூத்துக்குடி காந்திநகரில் உள்ள தோமையார் ஆலயத்தில், மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குனருமான கென்னடியின் மகள் ஷெகினா மற்றும் ஸ்டெனி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும் தங்கள் மணக்கோலத்திலேயே மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்களின் இந்த பசுமை முயற்சி திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம், மரக்கன்று நடுதல், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் இயக்குனரான கென்னடி, தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். காடுகளின் பரப்பளவை உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மரங்களின் அளவு 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால், சுற்றுச்சூழலை பாதிக்கும் கோனோ கார்பஸ் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் இந்த நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட நீதிபதி இராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, வன உதவி அலுவலர் முனியப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஆறுமுகம் ஆகியோர் மணமக்களின் இந்தச் செயலை நேரில் பாராட்டி வாழ்த்தினர். இவர்களுடன் உடன்குடி பவர் பிளான்ட் உதவி பொறியாளர்கள் அப்துல் பக்கீம், வள்ளியம்மாள், தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் ராஜா, சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் பிரேமலதா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளர் ராமகிஷோர், மேலாளர் சிவக்குமார், தூத்துக்குடி சிப்காட் அதிகாரிகள் லியோ, மேரி, அண்டோ, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை அட்லியா திட்ட மேலாளர் பாலாஜி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் சுதாகர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கரூர் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் (CM) விஜய் ஆற்றிய உரை தற்பொழுது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேடையில் அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தனது வழக்கமான பாணியில் 'புலி உறுமுது' என்ற திரைப்படப் பாடலைப் பாடிப் பேசிய முதலமைச்சர் விஜய், கரூரில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்து கொள்ளையடித்ததன் காரணமாக, இங்குள்ள கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் 'ஓடு.. ஓடு.. ஓடு..' என்று தற்பொழுது பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் எனச் செந்தில்பாலாஜியை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். மேலும், மற்றொருவர் வெளிநாட்டிற்கு ஓடிச் சென்று தலைமறைவாக ஒளிந்துள்ளார் என்றும் அவர் விமர்சித்தார். இதன்போது கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்த முதலமைச்சர் விஜய் சிரித்துக் கொண்டே, 'வெளிநாடு என்றதும் நீங்கள் யாரும் உடனடியாக ஸ்டாலின் என்று நினைத்துவிட வேண்டாம்; எனக்கு ஸ்டாலின் சார் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட பாசமும் மரியாதையும் இருக்கிறது' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
    1
    கரூர் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் (CM) விஜய் ஆற்றிய உரை தற்பொழுது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேடையில் அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தனது வழக்கமான பாணியில் 'புலி உறுமுது' என்ற திரைப்படப் பாடலைப் பாடிப் பேசிய முதலமைச்சர் விஜய், கரூரில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்து கொள்ளையடித்ததன் காரணமாக, இங்குள்ள கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் 'ஓடு.. ஓடு.. ஓடு..' என்று தற்பொழுது பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் எனச் செந்தில்பாலாஜியை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். மேலும், மற்றொருவர் வெளிநாட்டிற்கு ஓடிச் சென்று தலைமறைவாக ஒளிந்துள்ளார் என்றும் அவர் விமர்சித்தார்.

இதன்போது கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்த முதலமைச்சர் விஜய் சிரித்துக் கொண்டே, 'வெளிநாடு என்றதும் நீங்கள் யாரும் உடனடியாக ஸ்டாலின் என்று நினைத்துவிட வேண்டாம்; எனக்கு ஸ்டாலின் சார் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட பாசமும் மரியாதையும் இருக்கிறது' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன. பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன.

பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த உட மரங்கள் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    1
    திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மரங்கள் வேகமாக அசைந்தன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் மரங்களின் கீழ் நிற்கவோ அல்லது அதன் கீழ் அமரவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மரங்கள் வேகமாக அசைந்தன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் மரங்களின் கீழ் நிற்கவோ அல்லது அதன் கீழ் அமரவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு தனது காரில் புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், தான் விசாரணை அதிகாரிகளிடம் என்ன கூறினேனோ, அதையே உங்களிடமும் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உண்மையான திமுக தொண்டனை யாராலும் மிரட்ட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
    1
    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், தான் விசாரணை அதிகாரிகளிடம் என்ன கூறினேனோ, அதையே உங்களிடமும் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உண்மையான திமுக தொண்டனை யாராலும் மிரட்ட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    17 hrs ago
  • கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவைப் போற்றும் வகையில், தவெக கட்சியின் சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்ட சதித் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் வரும் தலைமுறைக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவதே இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கரூரில் நடந்த அசம்பாவிதத்தினால் ஏற்பட்ட தீராத சோகத்தின் காரணமாகவே தான் வீட்டில் முடங்கிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். இதனைத் தவறாகச் சித்தரித்து, தான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டதாகத் தன் மீது எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் செய்தார்கள் என்று அவர் வேதனையுடன் சாடினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தற்போது கரூர் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவைப் போற்றும் வகையில், தவெக கட்சியின் சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்ட சதித் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் வரும் தலைமுறைக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவதே இந்த நினைவுச் சின்னத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கரூரில் நடந்த அசம்பாவிதத்தினால் ஏற்பட்ட தீராத சோகத்தின் காரணமாகவே தான் வீட்டில் முடங்கிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார். இதனைத் தவறாகச் சித்தரித்து, தான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டதாகத் தன் மீது எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் செய்தார்கள் என்று அவர் வேதனையுடன் சாடினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தற்போது கரூர் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    1
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் 25 வயதுடைய தெய்வானை என்ற கோயில் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில், திருவிழா காலங்களில் தேர் முன்னே செல்வதற்கும், கொடிப்பட்ட ஊர்வலத்திற்கும் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர். யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலம் குறித்து விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தெய்வானை யானை நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருவதால், பக்தர்கள் நேரடியாக யானைக்குப் பழங்களை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், யானைக்குக் கூடுதல் நடைப்பயிற்சி அளிப்பது அதன் ஆரோக்கியத்திற்கு உகந்தது என கோயில் அதிகாரிகளுக்கு வன அலுவலர் இளையராஜா ஆலோசனை வழங்கினார். இதனிடையே, சரவணப்பொய்கையில் யானை ஓய்வெடுப்பதற்காகக் கூடுதலாக ஒரு குடில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.