logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளதைக் கண்டித்து அப்பகுதிப் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்காரனின் சொந்த ஊர் இந்த கீழவடகரை ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்சாமிபுரம், கல்லார் ரோடு, இந்திரா காலனி, காளியம்மன் கோவில் தெரு மற்றும் ஒத்தமரம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் தடைப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளதால் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலிக்குடங்களுடன் அழகர்சாமிபுரம் சாலையில் திரண்டு, தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நீடித்ததுடன் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஊராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பாக போராட்டம் கைவிடப்பட்டது.

9 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
9 hrs ago

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளதைக் கண்டித்து அப்பகுதிப் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்காரனின் சொந்த ஊர் இந்த கீழவடகரை ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்சாமிபுரம், கல்லார் ரோடு, இந்திரா காலனி, காளியம்மன் கோவில் தெரு மற்றும் ஒத்தமரம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் தடைப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளதால் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலிக்குடங்களுடன் அழகர்சாமிபுரம் சாலையில் திரண்டு, தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நீடித்ததுடன் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஊராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பாக போராட்டம் கைவிடப்பட்டது.

More news from Dindigul and nearby areas
  • மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
    1
    மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    8 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    11 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூரில் அமைந்துள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூரில் அமைந்துள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் கோவில் மேடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளால் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கண்ணப்பன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கண்ணப்பன் நகர் சுகாதார வளாகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், தேவையான பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதிகளுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை வடக்கு பகுதிகளில் நிலவும் இத்தகைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி மாவட்ட தலைவர் கையிரப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி பிரசாத் மற்றும் திருக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    2
    கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் கோவில் மேடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளால் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கண்ணப்பன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கண்ணப்பன் நகர் சுகாதார வளாகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், தேவையான பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதிகளுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை வடக்கு பகுதிகளில் நிலவும் இத்தகைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி மாவட்ட தலைவர் கையிரப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி பிரசாத் மற்றும் திருக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Political Pulse
    Political Pulse
    Reporter கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று முப்பதாம் ஆண்டு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இந்த விழாவில் காலை பால்குட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அலங்காரத்துடன் கூடிய அம்மனை பக்தர்கள் தூக்குத்தேரில் சுமந்து கொண்டு கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று முப்பதாம் ஆண்டு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இந்த விழாவில் காலை பால்குட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அலங்காரத்துடன் கூடிய அம்மனை பக்தர்கள் தூக்குத்தேரில் சுமந்து கொண்டு கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    44 min ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளதைக் கண்டித்து அப்பகுதிப் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்காரனின் சொந்த ஊர் இந்த கீழவடகரை ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்சாமிபுரம், கல்லார் ரோடு, இந்திரா காலனி, காளியம்மன் கோவில் தெரு மற்றும் ஒத்தமரம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் தடைப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளதால் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலிக்குடங்களுடன் அழகர்சாமிபுரம் சாலையில் திரண்டு, தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நீடித்ததுடன் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஊராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பாக போராட்டம் கைவிடப்பட்டது.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளதைக் கண்டித்து அப்பகுதிப் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்காரனின் சொந்த ஊர் இந்த கீழவடகரை ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்சாமிபுரம், கல்லார் ரோடு, இந்திரா காலனி, காளியம்மன் கோவில் தெரு மற்றும் ஒத்தமரம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

குடிநீர் விநியோகம் தடைப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளதால் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலிக்குடங்களுடன் அழகர்சாமிபுரம் சாலையில் திரண்டு, தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நீடித்ததுடன் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஊராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பாக போராட்டம் கைவிடப்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலில் உள்ள பாலம் பல வருடங்களாக சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த நுழைவாயிலில் நுழையும் எவருக்கும் விபத்து நிச்சயம் ஏற்படும் சூழல் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாலத்தில் உள்ள பள்ளங்கள் குறித்து அறியாமல் விழுந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவப் பயனாளிகள், தாங்கள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தோமா அல்லது கை கால்களை உடைத்துக்கொள்ள வந்தோமா என்று கேள்வி எழுப்பி, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    1
    ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலில் உள்ள பாலம் பல வருடங்களாக சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த நுழைவாயிலில் நுழையும் எவருக்கும் விபத்து நிச்சயம் ஏற்படும் சூழல் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலத்தில் உள்ள பள்ளங்கள் குறித்து அறியாமல் விழுந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவப் பயனாளிகள், தாங்கள் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தோமா அல்லது கை கால்களை உடைத்துக்கொள்ள வந்தோமா என்று கேள்வி எழுப்பி, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    10 hrs ago
  • மதுரை அவனியாபுரம் மந்தை திடலில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்டார். அமைச்சர் நிர்மல் குமார் விழா மேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்ட சிறிய அரிசிப் பைகளை வாங்குவதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முண்டியடித்து வந்தனர். தவெகவினர் கூட்டத்தை முறையாக வரிசைப்படுத்தாமல் அரிசிப் பைகளை வழங்கத் தொடங்கியதால், கட்டுக்கடங்காத தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தக் காட்சியைப் பார்த்த பொதுமக்கள், "ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர். இந்த நலத்திட்ட விழா, கடந்த வாரம் அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    1
    மதுரை அவனியாபுரம் மந்தை திடலில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்டார்.

அமைச்சர் நிர்மல் குமார் விழா மேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்ட சிறிய அரிசிப் பைகளை வாங்குவதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முண்டியடித்து வந்தனர். தவெகவினர் கூட்டத்தை முறையாக வரிசைப்படுத்தாமல் அரிசிப் பைகளை வழங்கத் தொடங்கியதால், கட்டுக்கடங்காத தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த பொதுமக்கள், "ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர். இந்த நலத்திட்ட விழா, கடந்த வாரம் அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.