logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!

9 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
9 hrs ago

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!

More news from தமிழ்நாடு and nearby areas
  • வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!
    1
    வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளால் இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம். வாகனத் தணிக்கை மேற்கொண்டு  பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. 
சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக சில இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட எல்.இ.டி. விளக்குகளின் ஒளி, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் நேரடியாக பாய்வதால் சில விநாடிகள் சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இரவு பயணங்களின் போது இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனுமதிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்ட விளக்குகள் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது!
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
    1
    மூன்று நாட்களாக உபயோகத்தில் இல்லாத குடிநீர் பொதுமக்கள் அவதி.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைகை வடகரை கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளது இதனால் மூன்றாவது நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதனை சரி செய்வதன் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
    user_Kalam karthikeyan
    Kalam karthikeyan
    திருப்புவனம், சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_R. மயூரி ராமேஸ்வரி
    R. மயூரி ராமேஸ்வரி
    மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    1
    புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு; நோயாளிகள் அவதி 
மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள்  இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    2 hrs ago
  • கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது. இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
    1
    கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது
திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன.
இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்
இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது.
இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்
    1
    குலுங்கியது குன்றம்  ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்

*குலுங்கியது குன்றம்  ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* 
மதுரை மாவட்டம் 
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்.
இன்று காலை பௌர்ணமி திதி 
9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. 
இதனால் மாலை 6 மணிக்கு முதல்  திருப்பரங்குன்றத்தில் கிரிவலம்  செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள்  மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். '
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.
நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.