வந்தவாசி அனைத்து ஜமாஅத் சார்பாக ரமலான் தின சிறப்பு தொழுகை..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அமையப்பட்டு ஈத்ஹா மைதானத்தில் புனித ரமலான் பண்டிகையையொட்டி, அனைத்து ஜமாஅத் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் முக்தவல்லி கே.ஏ.டபுள்யூ காதர் ஷரீப் தலைமையில் நடைபெற்ற இச் சிறப்பு தொழுகையில்,அனைத்து ஜமாஅத் தை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தனர். மேலும் தொழுகை முடிந்து வந்தவர்களை ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் நகர திமுக செயலாளர் தயாளன், நகர் மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி ஜமாஅத் சார்பாக, சிறப்பு தொழுகை ஈத்ஹா மைதானத்தில் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. இமாம் ஜாபர் அலி நடத்திய தொழுகையில் தாழம்பள்ளம் மஹல்லா வாசிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி அனைத்து ஜமாஅத் சார்பாக ரமலான் தின சிறப்பு தொழுகை..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அமையப்பட்டு ஈத்ஹா மைதானத்தில் புனித ரமலான் பண்டிகையையொட்டி, அனைத்து ஜமாஅத் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் முக்தவல்லி கே.ஏ.டபுள்யூ காதர் ஷரீப் தலைமையில் நடைபெற்ற இச் சிறப்பு தொழுகையில்,அனைத்து ஜமாஅத் தை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு
தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தனர். மேலும் தொழுகை முடிந்து வந்தவர்களை ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் நகர திமுக செயலாளர் தயாளன், நகர் மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி ஜமாஅத் சார்பாக, சிறப்பு தொழுகை ஈத்ஹா மைதானத்தில் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. இமாம் ஜாபர் அலி நடத்திய தொழுகையில் தாழம்பள்ளம் மஹல்லா வாசிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- Post by JEK MEDIAtamil2
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- பர்கூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விவசாயின் துண்டை பிடுங்கியதால் பரபரப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மணி என்பவரின் கழுத்தில் உள்ள பச்சை நிற விவசாயின் துண்டை காவல்துறையினர் எடுத்துச் செல்லக்கூடாது என வாங்கிக் கொண்டதால் வேட்பாளர் விவசாயி மணி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் துண்டை திருப்பிக் கொடுத்த பின் சமாதானத்துடன் சென்றார்.1
- செய்த திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், எச்சனள்ளி கிராமத்தை சேர்ந்த திராவிட தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சுவாரிசத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் தர்மபுரி நகருக்கு வந்த ஆறுமுகம், கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழல் ஏந்தியவாறு தேர்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி சென்றார். வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்வையிட்டு கைஅசைத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேவையான ஆவணங்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மனதை கவரும் விதமாகவும், நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வேடத்தில் வந்தேன். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று தெரிவித்தார். கிருஷ்ணர் வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இந்த சம்பவம் தர்மபுரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுபவர்களிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசாருதீன் உதுமான்அலி கையில் நெற்கதிர் எடுத்துகொண்டு கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி, மாவட்ட துணை செயலாளர் ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஒன்றிய செயலாளர் ராஜா, வினோத், உட்பட கட்சி மாவட்ட, ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்களுடன் பாபநாசத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1