logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காரியாபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா – பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. முதலில் முருகப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, அதன் பின்னர் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தினை மாவு, மாதுளைச் சாறு, திராட்சைச் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, விபூதி, சந்தனம், பன்னீர் மற்றும் பல்வேறு புனித திரவியங்களால் அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக முறையாக நடைபெற்றன. ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பிறகும், முருகப்பெருமானுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதன் போது கோவில் முழுவதும் வேத மந்திரங்கள் ஓங்கி ஒலித்ததுடன், பக்தர்கள் “அரோகரா” கோஷங்களை எழுப்பி ஆனந்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கோவிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த பால்குட ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலமுருகப்பெருமான் அழகிய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

2 hrs ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
2 hrs ago

காரியாபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா – பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன்

கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. முதலில் முருகப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்று,

அதன் பின்னர் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தினை மாவு, மாதுளைச் சாறு, திராட்சைச் சாறு, ஆரஞ்சு பழச்சாறு,

வில்வப் பொடி, அருகம்புல் பொடி, விபூதி, சந்தனம், பன்னீர் மற்றும் பல்வேறு புனித திரவியங்களால் அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக முறையாக நடைபெற்றன. ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பிறகும், முருகப்பெருமானுக்கு

தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதன் போது கோவில் முழுவதும் வேத மந்திரங்கள் ஓங்கி ஒலித்ததுடன், பக்தர்கள் “அரோகரா” கோஷங்களை எழுப்பி ஆனந்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கோவிலிலிருந்து

மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த பால்குட ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பின்னர், வண்ண மலர்களால்

அலங்கரிக்கப்பட்ட பாலமுருகப்பெருமான் அழகிய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள்

கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பிரசித்தி பெற்ற கோட்டூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் முதல் தேதி இன்று பிற்பகல் 2 மணி அளவில் மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது, இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன, 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர், இந்நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இதில் பலர் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், தீயனைப்புதுறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் , டி எஸ் பி கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், கால் நடை,மற்றும் மருத்துவத்துறையினர் யாரும் வராததால் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை சோதனையின்றி அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியைக் காண சுமார் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.விழா குழுவினர் சார்பாக மாடுபிடி வீரர்களுக்கும்,மாடு உரிமையாளர்களுக்கும் தங்கம்,வெள்ளி காசுகள், அண்டா, பீரோல் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பிரசித்தி பெற்ற கோட்டூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு  ஏப்ரல் முதல் தேதி இன்று பிற்பகல் 2 மணி அளவில்  மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது,
இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம்,  புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன, 50 மாடுபிடி  வீரர்கள் களத்தில் இறங்கினர், 
இந்நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள்  இருபதுக்கும்  மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இதில் பலர் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், 
தீயனைப்புதுறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 
, டி எஸ் பி கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,
கால் நடை,மற்றும் மருத்துவத்துறையினர் யாரும் வராததால் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை சோதனையின்றி அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்ச்சியைக் காண சுமார் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.விழா குழுவினர் சார்பாக மாடுபிடி வீரர்களுக்கும்,மாடு உரிமையாளர்களுக்கும் தங்கம்,வெள்ளி காசுகள், அண்டா, பீரோல் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு. மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* . தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு.
மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* 
.
தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும்  வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது.
தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை 
வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று  போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது  குறிப்பிடத்தக்கது.
வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி  தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட்,  தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று
பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.1) மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன். இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா ஆமமுக தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கும், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும், திருமாறன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. *மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:* மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என ஏ.சி. சண்முகம் கூறினார் *முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:* தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன் *வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:* நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம். *மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:* போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.
    1
    மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.1) மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது
மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன்.
இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா ஆமமுக தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கும், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும், திருமாறன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
*மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:*
மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என ஏ.சி. சண்முகம் கூறினார் 
*முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:*
தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன்
*வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:*
நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம்.
*மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:*
போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான்.  அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். 
இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், 
எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops,  TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். 
எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. 
எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது.  எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார்.
அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை  ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்
    1
    ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 
அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் 
இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.