காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ. மதியழகன் தரதரவென்று இழுத்து சென்றதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ. மதியழகன் தரதரவென்று இழுத்து சென்றதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.1
- முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 48 வாரமாக திண்ணை பிரச்சாரம் இன்று அரூர் எம்ஜிஆர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் திமுக அரசால் நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது1
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே இடுகாட்டுக்கு வழி இல்லாததால் இறந்த மூதாட்டியின் உடலை ஆபத்தானமுறையில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்த பொதுமக்கள் : தொடரும் அவலநிலை தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் அருந்ததியினர் காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் , இப்பகுதியில் இறந்தவர்களை அருகே உள்ள பீணியாற்றை கடந்து சென்று அங்குள்ள ஓடையின் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம். கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையின் காரணமாக பீணியாற்றில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மாரி (85) என்கிற மூதாட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அவரை இன்று உறவினர்கள் பாடைக்கட்டி ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி ஆற்றை கடந்து தூக்கி சென்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் இது போன்று செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து பாலம் அமைக்க வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியின் அருகே சுடுகாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1