Shuru
Apke Nagar Ki App…
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
J.MUTHU
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பரவலான இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கினர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.1