Shuru
Apke Nagar Ki App…
காங்கயம்: தினசரி மார்கட் கழிவுநீர் அடப்பை சரி செய்ய கோரிக்கை திருப்பூர் மாவட்டம் பூமியும் சென்னிமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படவதோடு அதிக துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Gobi Ponnusamy
காங்கயம்: தினசரி மார்கட் கழிவுநீர் அடப்பை சரி செய்ய கோரிக்கை திருப்பூர் மாவட்டம் பூமியும் சென்னிமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படவதோடு அதிக துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் மாவட்டம் பூமியும் சென்னிமலை ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படவதோடு அதிக துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.1
- திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்1
- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சமீபத்தில் திருச்சியிலிருந்து கம்பம் நோக்கி சென்றபோது, அதன் வழித்தட காட்டி எல்.இ.டி திரையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிர விடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசு பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் எல்.இ.டி திரையை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, அதில் இருந்த தகவல்களை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பேருந்தில் உள்ள வைஃபை இணைப்பின் கடவு சொல்லை கண்டறிந்து, அதன் மூலம் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் மீண்டும் பதிவேற்றப்பட்டன. இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாத வண்ணம் டிஜிட்டல் பலகைகளின் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- *இலங்கங்குறிச்சியில் மாரியம்மன் கோயில் அருகே கிணற்றிற்கு தடுப்பு வேலி அமைத்து தருவதாக மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.* *ஒரேநாளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.* திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடங்கி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இளங்காங்குறிச்சி பொதுமக்களிடையே பேசுகையில் குழந்தைகள் தடுமாறி விழுந்தால் உயிர் போய்விடும் உயிரோட அருமை எனக்கு மட்டும் தெரியும் அதனால் கிணற்றுக்கு தடுப்பு வேலி வெற்றி பெற்றவுடன் சொந்த செலவில் அமைத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது . வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி! முன்னாள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கைது! போலீசார் நடவடிக்கை. தேனி,ஏப்.8 தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி சாந்தி (48). இவரது மகன் சூரிய நாராயணன் என்பவர் பிஇ படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு தெரிந்த தவமணி என்பவர் மூலமாக, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக அப்போது பணி புரிந்து வந்த மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மணி நகரம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ மாணிக்கம்மகன் சண்முகசுந்தரம் என்பவரிடம் அறிமுகமாகி உள்ளனர் . பின்னர் பிஆர்ஓ சண்முகசுந்தரம் அவர் தனக்கு பல அரசு அதிகாரிகளையும் மற்றும் பல அரசியல்வாதிகளை தெரியும் என்றும் அவர்கள் மூலம் தான் பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக அவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய சாந்தியிடம், பிஆர்ஓ பணம் கொடுத்தால் உனது மகனுக்கு உடனே ஏபிஆர்ஓ வேலையை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் சாந்தியிடம், பல்வேறு தேதிகளில் பல தவணைகளாக ரூ.50 லட்சத்தை பிஆர்ஓ மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் இதே போன்று பவித்ரா முத்துப்பாண்டி உள்ளிட்ட நபர்களை சேர்த்து ஆக மொத்தம் 74 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட சாந்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் எஸ் பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிஆர்ஓ வை தேடி வந்த நிலையில், பிஆர்ஓ சண்முகசுந்தரம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, எஸ்ஐ முகமதுயாகியா, எஸ்எஸ்ஐ சுந்தரம் குழுவினர் நேற்று தனியார் விடுதியில் தங்கியிருந்த பிஆர்ஓ சண்முக சுந்தரத்தை பிடித்து, தேனி மாவட்ட குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்த போலீசார், அவரை கைது செய்து நேற்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.1