தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு Extra ரூ10 வசூலிக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கிராவல் குவாரிகளுக்கு அனுமதி கிடையாது. சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பொற்கொடி அறிவிப்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பொற்கொடி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆட்சியர் பொற்கொடி பேசுகையில், நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான தேர்தல் தேதியை வெளியிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தெரிந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் மானாமதுரை (தனி) தொகுதிகளுக்கு வரும் 23-4-26 அன்று அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகத்தில் உள்ள தலைவர்கள், அரசியல் தொடர்பான சின்னங்கள் மற்றும் பேனர்கள் 24 மணி நேரத்திலும், பொது இடங்களில் 48 மணி நேரத்திலும், தனியார் இடங்களில் உள்ளவைகள் 72 மணி நேரத்தில அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க தொகுதிக்கு 3 பறக்கும் படை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் குவாரிகளுக்கு அனுமதி கிடையாது எனவும், அரசு மதுபான கடைகளில் MRP க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட மாட்டாது அவ்வாறு தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பொற்கொடி உறுதியளித்தார்.

- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1
- தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்1
- தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நமது மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், மதப் பெரியோர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா கூறும்போது.... மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது மிகப்பெரிய தவறு. அவரை மூன்று முறை முதலமைச்சர் ஆக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், போடி தொகுதி மக்களுக்கும் அவர் துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வரும் தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து நேரடியாகப் போட்டியிடுவேன். என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.1
- திருச்சி மாநகர் முழுவதும் திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ரயில்வே மானிய கோரிக்கையின் 2026- 2027 மீதான விவாதத்தில் உரையாற்றினர்.1