மத்தூர் அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு: லாரியில் பதுங்கிய விஷப்பாம்பு மீட்பு – வாகன நெரிசல் மற்றும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்திலிருந்து விஷப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்த முதியவர் ஒருவர், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து விஷப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அருகில் இருந்தவர்களிடம் தெரிவிக்க, பொதுமக்கள் சென்று பார்த்தபோது லாரியின் பின்பக்க டயரின் அடிப்பகுதியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மத்தூர் காவல்துறையினர், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பதுங்கியிருந்த பாம்பை சாதுரியமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதாக கூறி எடுத்துச் சென்றனர்.அரசு மருத்துவமனையின் இருபுறங்களிலும் நீண்ட நாட்களாக பல கனரக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மருத்துவமனைக்கு அவசரப் பிரிவில் நோயாளிகளை அழைத்து வரும்போதும், வாகனங்களை வளைத்து செல்லும்போதும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தும் பாதையாக இது உள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல வழியின்றி அனைவரும் அவதிப்படுகின்றனர்.மேலும், இப்பகுதியில் நீண்ட நாட்களாகக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அல்லப்படாமல் தேங்கி கிடப்பதால், அப்பகுதி முழுவதுமே குப்பை மேடாக மாறி வரும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, அசம்பாவிதங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் ஏதும் நடக்கும் முன், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தமாக பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தூர் அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு: லாரியில் பதுங்கிய விஷப்பாம்பு மீட்பு – வாகன நெரிசல் மற்றும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்திலிருந்து விஷப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்த முதியவர் ஒருவர், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து விஷப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே
அவர் அருகில் இருந்தவர்களிடம் தெரிவிக்க, பொதுமக்கள் சென்று பார்த்தபோது லாரியின் பின்பக்க டயரின் அடிப்பகுதியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மத்தூர் காவல்துறையினர், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பதுங்கியிருந்த பாம்பை சாதுரியமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதாக கூறி எடுத்துச் சென்றனர்.அரசு மருத்துவமனையின் இருபுறங்களிலும் நீண்ட
நாட்களாக பல கனரக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மருத்துவமனைக்கு அவசரப் பிரிவில் நோயாளிகளை அழைத்து வரும்போதும், வாகனங்களை வளைத்து செல்லும்போதும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தும் பாதையாக இது உள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல வழியின்றி அனைவரும் அவதிப்படுகின்றனர்.மேலும், இப்பகுதியில் நீண்ட நாட்களாகக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அல்லப்படாமல் தேங்கி கிடப்பதால்,
அப்பகுதி முழுவதுமே குப்பை மேடாக மாறி வரும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, அசம்பாவிதங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் ஏதும் நடக்கும் முன், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தமாக பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்1
- தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் மண்டல பூஜை கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின் நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் நடைப்பெற்றது.1
- ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குரோஸ் அகடாமி விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.1
- புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி சித்தூர் முதல் மேல்பட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து நெல்லிவாசல்நாடு ஊராட்சி நெல்லிவாசல் சாலையில் உள்ள ஓடை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மலையை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் சுந்தரேசன், வனச்சரகர் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.1
- மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.1
- பாலக்கோட்டில் கனமழையால் நீரில் மூழ்கிய விவசாயப் பயிர்கள் – நீர்வழிக் கால்வாய்களைத் தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு - உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து, பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படாத நீர்வழிக் கால்வாய்களே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு 381.மில்லி மீட்டர் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பாலக்கோடு ஒன்றியம், செல்லியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அல்லியூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. அல்லியூரைச் சேர்ந்த விவசாயி மாதையன் கூறுகையில் இரண்டு ஏக்கர் நிலத்தில் சாம்பல் பூசணி, மிளகாய் மற்றும் சம்பங்கி பூச்செடிகளைச் சாகுபடி செய்திருந்த நிலையில், கனமழையால் அவரது விவசாய நிலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால், பயிர்கள் அழுகி வீணாகின. அல்லியூர் பகுதியில் உள்ள ஏரிக்கு மழை நீர் செல்லும் கால்வாயில் மின் கம்பங்கள் நடப்பட்டும், ஊராட்சி நிர்வாகம் கால்வாயை பராமரிக்கததால் கால்வாய் அடைபட்டு ஏரிக்கு செல்ல வேண்டிய மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்ததாகவும், ஊராட்சி நிர்வாகத்திடம் கால்வாயை அகலப்படுத்தி தூர்வாரி, சீர் செய்ய பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் இதன் காரணமாக, கனமழையின்போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஏரிக்குச் செல்லாமல், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாகவும், மேலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் மழைநீரும் முறையான வடிகால் வசதி இல்லாததால், கால்வாய் வழியாக வெளியேற முடியாமல் வயல்வெளிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அல்லியூர் கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்த மழை நீர் சாம்பல் பூசணி, சம்பங்கி பூ, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால், சாகுபடிக்காக செலவிட்ட தொகையைக்கூடத் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழைநீர் தேங்கினால் பயிர்கள் முழுமையாக அழுகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் , ஏற்கெனவே விவசாயச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், அல்லியூர் பகுதியில் உள்ள நீர்வழிக் கால்வாய்களை உடனடியாகத் தூர்வாரி, தடைகளை அகற்றி, மழைநீர் தடையின்றி ஏரிக்குச் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.1
- மத்தூர் அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு: லாரியில் பதுங்கிய விஷப்பாம்பு மீட்பு – வாகன நெரிசல் மற்றும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்திலிருந்து விஷப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்த முதியவர் ஒருவர், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து விஷப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அருகில் இருந்தவர்களிடம் தெரிவிக்க, பொதுமக்கள் சென்று பார்த்தபோது லாரியின் பின்பக்க டயரின் அடிப்பகுதியில் பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மத்தூர் காவல்துறையினர், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பதுங்கியிருந்த பாம்பை சாதுரியமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதாக கூறி எடுத்துச் சென்றனர்.அரசு மருத்துவமனையின் இருபுறங்களிலும் நீண்ட நாட்களாக பல கனரக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மருத்துவமனைக்கு அவசரப் பிரிவில் நோயாளிகளை அழைத்து வரும்போதும், வாகனங்களை வளைத்து செல்லும்போதும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தும் பாதையாக இது உள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல வழியின்றி அனைவரும் அவதிப்படுகின்றனர்.மேலும், இப்பகுதியில் நீண்ட நாட்களாகக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அல்லப்படாமல் தேங்கி கிடப்பதால், அப்பகுதி முழுவதுமே குப்பை மேடாக மாறி வரும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, அசம்பாவிதங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் ஏதும் நடக்கும் முன், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தமாக பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.4
- கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.1