Shuru
Apke Nagar Ki App…
துவரங்குறிச்சியில் என்டிஏ கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர்.பி.எல். விஜயகுமாரை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இது நேற்று காலை புனித அந்தோனியார் தேவாலயத்திலும், மாலை 5.00 மணிக்கு வார்டு 2 ல் ஆத்துப்பட்டி, பூத நாயகி அம்மன் கோவில் தெருவிலும் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Usha arun News
துவரங்குறிச்சியில் என்டிஏ கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சியில் என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர்.பி.எல். விஜயகுமாரை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இது நேற்று காலை புனித அந்தோனியார் தேவாலயத்திலும், மாலை 5.00 மணிக்கு வார்டு 2 ல் ஆத்துப்பட்டி, பூத நாயகி அம்மன் கோவில் தெருவிலும் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- Post by Subramani Press Reporter Subramani1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1