தேயிலைத் தோட்ட தொழிற்சங்கத்தினர் வனத்துறையினரை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும், அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கத்தேவன் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டின் கீழ் ரூபாய் 17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார்.1
- தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் தேனி தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செய்தார் பின் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் முயற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு வருகின்றனர் என்னையும் என்னுடன் சேர்ந்தவர்களையும் தாய் உள்ளத்தோடு திமுகவில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வருகிற 7 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இன்று பிறப்பு விழா இன்று நடைபெறுகிறது1
- சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.1
- Post by RAJA news1
- மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.1
- Post by Sangili.v1
- ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமக்காபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டின் கீழ் ரூபாய் 17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இன்று திறந்து வைத்து குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தினை குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.1