logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நெல் கொள்முதல் பாதிப்பு : மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். ​இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

3 hrs ago
user_Nallendran
Nallendran
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
3 hrs ago

நெல் கொள்முதல் பாதிப்பு : மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். ​இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது  அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
    1
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது 
அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. 
பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ  சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக  நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 min ago
  • தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும், அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள்  வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட  ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள  இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு  தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும்
அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும்,
அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக  கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி
பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில்  ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி
கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    1
    வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம்  இன்று4:3:2026 புதன்கிழமை  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது  1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர்  
இந்த பேருந்து நிலையத்தில்  முன்பு இருந்ததைப் போல்  
15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை
தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ?
கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது
பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது?
தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை?
குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை?
மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது   தற்போது இல்லை ? 
பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது 
அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது  ..
இவன்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    15 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். ​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    3
    மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். 
அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா,  நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.