தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய நடிகர் விஜய் : நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் மதுரை : மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. த.வெ.க. தலைவர் விஜய் இதை மீறி இருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய், நேற்று வயர்லஸ் ரோடு, கே.கே.நகர் மற்றும் காஜாமலை பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மற்றும் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். இப்பிரசாரத்தின் போது அவர் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். வயர்லஸ் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கே.கே.நகரில் உள்ள நூருல் ஹுதா மசூதி மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பச்சநாச்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களுக்கு விஜய் நேரில் சென்று வழிபாடு செய்ததோடு அங்கு வந்திருந்தவர்களிடம் வரவேற்பு பெற்றார். மத வழிபாட்டுத் தலங்களுக்குள் கட்சி அடையாள சின்னங்களுடன் சென்று வாக்கு சேகரிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய நடிகர் விஜய் : நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் மதுரை : மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. த.வெ.க. தலைவர் விஜய் இதை மீறி இருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய், நேற்று வயர்லஸ் ரோடு, கே.கே.நகர் மற்றும் காஜாமலை பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மற்றும் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். இப்பிரசாரத்தின் போது அவர் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். வயர்லஸ் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கே.கே.நகரில் உள்ள நூருல் ஹுதா மசூதி மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பச்சநாச்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களுக்கு விஜய் நேரில் சென்று வழிபாடு செய்ததோடு அங்கு வந்திருந்தவர்களிடம் வரவேற்பு பெற்றார். மத வழிபாட்டுத் தலங்களுக்குள் கட்சி அடையாள சின்னங்களுடன் சென்று வாக்கு சேகரிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
- சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1