சேலம் சிவதாபுரம் அருகே செல்போன் டவரில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் டவரில் இன்று காலை 8:30 மணியளவில் முதியவர் ஒருவர் எறினார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சிப் பகுதிக்கு சென்று கோஷமிட்டார். அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வரச் சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அது கேட்காமல் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். இது எடுத்து மக்கள் கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து டவரில் நின்று கொண்டிருந்த முதியவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரில் நின்று கொண்டிருப்பது சிவதாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த சகாதேவன் என தெரியவந்தது. மேலும் இவர் தனது மகன் ராமசாமியை போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், விடுவித்தால் தான் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குவேன் என்று கூறினார். இதை அடுத்து போலீசார் சகாதேவனின் மகன் ராமசாமியை அழைத்து வந்து செல்போன் மூலம் சகாதேவனிடம் பேச வைத்தனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சிவதாபுரம் அருகே செல்போன் டவரில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் டவரில் இன்று காலை 8:30 மணியளவில் முதியவர் ஒருவர் எறினார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சிப் பகுதிக்கு சென்று கோஷமிட்டார். அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வரச் சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அது கேட்காமல் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். இது எடுத்து மக்கள் கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து டவரில் நின்று கொண்டிருந்த முதியவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரில் நின்று கொண்டிருப்பது சிவதாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த சகாதேவன் என தெரியவந்தது. மேலும் இவர் தனது மகன் ராமசாமியை போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், விடுவித்தால் தான் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குவேன் என்று கூறினார். இதை அடுத்து போலீசார் சகாதேவனின் மகன் ராமசாமியை அழைத்து வந்து செல்போன் மூலம் சகாதேவனிடம் பேச வைத்தனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் காலாண்டுத் தேர்வுக்கு கட்டாய வசூல்? – தலைமை ஆசிரியர் மீது புகார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வுக்காக, 900-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலா 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அரசு விதிமுறைகளை மீறி கட்டாயமாக வசூல் செய்து, தேர்வு எழுத அனுமதித்ததாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி செல்வம் மீது புகார் எழுந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபோது, இதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் நல்லதம்பி என்பவர், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களிடம் தொகை வசூலிக்கப்பட்டது உண்மைதான் என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், இதற்கான அரசாணையைத் தலைமை ஆசிரியரிடம் பெற்று ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்தபோதும், முறையான பதில் அளிக்காமல் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரைச் சந்தித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து தற்போது 100 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியில் தெரிவித்தால், உள்ளூர் நபர்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்த பிறகு பெற்றோர்களை அழைத்து, இதுகுறித்து வெளியே தெரிவித்தால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படும் என்றும், செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் தலைமை ஆசிரியர் ரவிசெல்வம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை எனப் பேட்டியளித்த மாணவர் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களிடம் இதுபோன்று பணம் வசூலிக்க அரசாணை உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டபோது, அத்தகைய அரசாணை இல்லை எனத் தெரிவித்ததாகப் புகார்தாரர் கூறியுள்ளார். இவ்வளவு புகார்கள் அளிக்கப்பட்டும் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அரசு பள்ளி மாணவர்களிடம் காலாண்டுத் தேர்வுக்காகக் கட்டாய வசூல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டி: 1. பாலமுருகன்.1
- மோகனூர் காந்தமலை முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூர் காந்தமலை முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது அப்போது மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்2
- நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 27ஆம் தேதி பனிப்பொழிவு காணப்பட்டது தமிழகத்தில் பருவ மழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 27ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை பனிப்பொழிவு தொடங்கியுள்ளது குறிப்பாக நாமக்கல் மாநகரில் சேலம் சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பனிப்பொழிவு மிக ரம்யமாக காட்சியளித்தது1
- மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.1
- கல்வராயன் மலை வெள்ளிமலை டாஸ்மார்க் கடையில் மோதல்! வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வெள்ளிமலை அரசு மதுபானக் கடையில், மதுபிரியர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கடை சூப்பர்வைசர் மதுபிரியர் ஒருவரைத் தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, இரு மதுபிரியர்களைக் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோதலுக்கான காரணம் மற்றும் காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.1
- இதோ குரு, News-க்கு தலைப்பு, நீங்க எதுவேணா எடுத்துக்கலாம்: 100 கோடி தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைப்பு! தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அமைந்தகரையில் அவரை கைது செய்த நிலையில், முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, இரவு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.1
- சேலம் சிவதாபுரம் அருகே செல்போன் டவரில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் டவரில் இன்று காலை 8:30 மணியளவில் முதியவர் ஒருவர் எறினார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சிப் பகுதிக்கு சென்று கோஷமிட்டார். அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வரச் சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அது கேட்காமல் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். இது எடுத்து மக்கள் கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து டவரில் நின்று கொண்டிருந்த முதியவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரில் நின்று கொண்டிருப்பது சிவதாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த சகாதேவன் என தெரியவந்தது. மேலும் இவர் தனது மகன் ராமசாமியை போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், விடுவித்தால் தான் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குவேன் என்று கூறினார். இதை அடுத்து போலீசார் சகாதேவனின் மகன் ராமசாமியை அழைத்து வந்து செல்போன் மூலம் சகாதேவனிடம் பேச வைத்தனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நிலப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மொட்டைய கவுண்டர்(88) முதியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டைய கவுண்டர் (88) என்பவருக்குச் சொந்தமான நிலம், சர்வே எண் 261A/2K, பட்டா எண் 233-ல் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து கம்பிவேலி அமைப்பதற்காக வருவாய்த் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குறுவட்ட அளவர் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதியவர் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும், தனது நிலத்தைப் பாதுகாக்கவும், எல்லைக் கற்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லை எனவும் கூறினார். இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொட்டைய கவுண்டர், அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார்.அங்கு இருந்த காவலர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனது நிலம் மற்றும் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், நிலப் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.1