Shuru
Apke Nagar Ki App…
சங்கரப்பேரி: கருப்பசாமி கோவிலில் 141 திருவிளக்கு பூஜை! தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
சங்கரப்பேரி: கருப்பசாமி கோவிலில் 141 திருவிளக்கு பூஜை! தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமம் நாண்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் டிப்பர் லாரி செல்கின்றன.இதனால் ஊருக்குள் செல்லும் சாலை புதியதாக போடப்பட்டது. இதில் இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக 60 முதல் 80 டன் பாராங்கற்கள் ஜல்லி, மண்,எமசென்ட் ஆகிய கனிமவளங்களை பகல் இரவு பாராமல் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றனர். இந்த ரோடுகள் மிகவும் குறுகிய சாலை என்பதால் இந்த கிராம மக்கள் பெரிய டிப்பர் லாரிகள் வரும்போது நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் இந்த லாரிகளால் கிராமத்தில் குறுக்கு மறுக்காக செல் மின் உயர் ஒரு மாதத்தில் ஆறுமுறை அறுந்து விழுந்துள்ளது. இதில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின் உயிரில் இருந்து பெண்குழந்தை அதிஷ்டவசமாக உயிர் ஜ தப்பியது, மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கல் விழுந்ததில் அவாவூரைச் சேர்ந்த விவசாயி படுகாயம் அடைந்து நடக்க முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அவ்வூர் வழியாக வந்த லாரியை சிறை பிடித்தனர். பின்னர் வாக்குவாதம் ஏற்படவே லாரிகளை அனுப்பி விட்டு, நேற்று காலையில் கயத்தாறு காவல் நிலையத்திற்கு, கயத்தாறு தாலூக அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடி வந்து தலைமயிடத்து தாசில்தார் அருணாவிடம் மனு கொடுத்தனர்.அந்த கிராம மக்கள் மனுவில் கூறியதாவது இந்த கனரக டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் குழந்தைகளுக்கு உயிர் பலி ஏற்படும் ஆபாய நிலை உள்ளது.ஆகவே அவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையென்றால் ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டம் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறி மனு கொடுத்தனர்.3
- நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது1
- Sri Kanna Public School - CBSE Chinthamani - Puliyangudi Tenkasi1
- தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு சங்கத்தின் தலைவர் கட்டி அப்துல்காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்1
- Post by தமிழ்நாடு1
- தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1