Shuru
Apke Nagar Ki App…
திமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு இராசிபுரம் வட்டம் அத்தனூர் பனங்காட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் பகுதியில் போட்டியிலும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கணேஷ் G
திமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு இராசிபுரம் வட்டம் அத்தனூர் பனங்காட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் பகுதியில் போட்டியிலும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
More news from Kallakurichi and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- அவிநாசியில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள். சமூக நீதிப் பேசி ஏமாற்றும் திமுகவை பெண்கள் இனி மன்னிக்க மாட்டார்கள் என பேட்டி அளித்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பல்வேறுபகுதியில் இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து கர்நாடகதுணை முதல்வர் டி.கே சிவக்குமார் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.காங்கிரஸ் கட்சியின்மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு,முன்னாள் தலைவர் சேகர்,பருகூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- Post by Subramani Press Reporter Subramani1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பனங்காட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் பகுதியில் போட்டியிலும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1